நீங்களே இப்படி பண்ணினா எப்படி ஆண்டவரே.. இன்னைக்கு குறும்படம் போடல நீங்கதான் நாமினேட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடை பார்த்த நெட்டிசன்கள் கமலையே கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் பங்கேற்கும் எபிசோடின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கடந்த வாரம் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் வீரம், காதல், அம்மா சென்டிமெண்ட் என ஏகப்பட்டது இருப்பதாக பேசியுள்ளார் கமல். முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூட்டைமூட்டையா சாப்பிடுறாங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்களே பாப்கார்ன் சாப்பிட்டா எப்படி ஆண்டவரே!... உள்ளே பலபேரு பாப்கார்னை மூட்டைமூட்டையா சாப்பிடுறாங்க.. அவங்கதான் பெஸ்ட்டு பர்பார்மராம்! என கூறியுள்ளார்.

காதலே அல்ல..
மற்றொரு நெட்டிசனான இவர் அய்யோ ஆண்டவரே!... காதல்னு மட்டும் சொல்லாதீங்க!.... இந்த பயில்வான் பண்றது காதலே அல்ல.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அபிநயங்களும்..
கமல்ஹாசனின் வார்த்தை ஜாலமும் அபிநயங்களும்..
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்.. என கமலின் ரியாக்ஷன்களை தொகுத்து கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

உங்களதான் நாமினேட்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இங்க இம்புட்டு பேச்சு பேசுறீங்களே ஆண்டவரே, இன்னைக்கு ஒரு குறும்படமாச்சும் போட்டு அந்த குரூப் வாய மூடல உங்களதான் நாமினேட் பண்ணுவேன் நானு என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மொத்த கேங்கும் உடையும்
அர்ச்சனாவால ரியோவின் தனித்துவம் தெரியல
பாலாவால சம்யுக்தா தனித்துவம் தெரியல
ரம்யாவால ஆஜித் தனித்துவம் தெரியல
இந்த கேங்க முதல்ல பிரிச்சிவிடுங்கடா.. அப்ப தான்
மொத்த கேங்கும் உடையும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

செத எரிச்சல் ஆகுதப்பா..
இந்த பயில்வானுக்கு ஏன் இப்படி மட்டமான குறுக்கு புத்தி? எல்லாவற்றிலும் குறுக்குவழிதான். செம எரிச்சல் ஆகுதப்பா! என்று பாலாவை விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











