For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாரா வாரம் அவமானப்படுறதே வேலையா போச்சு.. கமலால் ஹேப்பியான பிக்பாஸ் ரசிகர்கள்!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பங்கேற்கும் கமல் கடந்த வாரம் அரங்கேறிய சம்பவங்கள் குறித்து விசாரிக்கவுள்ளது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

  குறிப்பாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் தூங்கி மொத்த டீம்மின் உழைப்புக்கும் வேட்டு வைத்த பாலாஜியை விளாசுகிறார் கமல்.

  பொழப்பா போயிடுச்சு

  பொழப்பா போயிடுச்சு

  ஏற்கனவே பாலாஜியை ரெட் கார்டு கொடுத்த வெளியேற்ற வேணடும் என கோரிக்கை விடுத்து வரும் ரசிகர்கள், கமல் அவரை விளாசுவதை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாரா வாரம் அவமானப்படுவதே பாலாஜிக்கு பொழப்பா போயிடுச்சு என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  சிரிச்சு டயர்டாகிட்டேன்

  சிரிச்சு டயர்டாகிட்டேன்

  மற்றொரு நெட்டிசனான இவர், நேத்து சுச்சி பாலா சண்டை ஆடியன்ஸ் எங்களுக்கு காமெடியா இருந்துச்சு.. செமயா சிரிச்சி சிரிச்சி டயார்டா ஆகிட்டேன்.. செம என்டர்டெய்ன்மென்ட் என குறிப்பிட்டுள்ளார்.

  பாலாவுக்கு ரெட் கார்டு

  பாலாவுக்கு ரெட் கார்டு

  புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் தயவு செய்து பாலாவுக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பி விடுங்க..... அப்படி வைத்து விட்டீங்கன்னா நிறைய பேரு உங்க கட்சில வந்து சேர்வார்கள்.. என கூறியுள்ளார்.

  ஃபிளாஷ் பேக் போய்டாதீங்க

  ஃபிளாஷ் பேக் போய்டாதீங்க

  கமல் சார் தயவு செய்து இந்த எபிசோடுக்கு என்ன தேவையோ அது மட்டும் பேசுங்க உங்க ஃபிளாஷ்பேக்க்குக்கு போய்டாதீங்க.. முடியல என கையெடுத்து கும்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

  சும்மா பாசம் பிச்சிக்கும்

  சும்மா பாசம் பிச்சிக்கும்

  பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 எடுத்தா அக்காவாக அர்ச்சனா தம்பியாக ரியோ தங்கையாக நிஷாவ எடுங்க விஜய் டிவி என குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், சும்மா பாசம் பிச்சிக்கும் என நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

  விஜய் டிவி ஆட்கள்

  விஜய் டிவி ஆட்கள்

  போனவாரம் பாலா மற்றும் அனிதாவிடம் தவறைசுட்டி காட்டிய மாதிரி இந்தமுறை ரியோ அந்த டோரை எட்டி உதைதது தவறு என்று சுட்டி காட்டுவீர்களா? அல்லது விஜய்டிவி ஆட்களுக்கு மட்டும் விதிவிலக்கா? நீங்கள் மையமா இல்லையா என்பது கூட இன்றே தெரிந்துவிடும் தேர்தல்வரை காத்திருக்க வேண்டியதில்லை எங்கள் ஓட்டு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

  வெடி வச்சு பேசுகிறார்

  வெடி வச்சு பேசுகிறார்

  புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பொடி வச்சு பேசல கமல் சார். தப்பு செஞ்சவங்களுக்கு ஓட்டு வெடி வச்சு பேசுகிறார் என கமல் பேசிய அரசியலை குறிப்பிட்டுள்ளார்.

  கடிக்க வராங்க

  கடிக்க வராங்க

  புரமோவில் கமல் பேசியதை கேட்ட இந்த நெட்டிசன், எங்க மாற்றம் வரது புரிஞ்சுக்க மாட்ராங்க எடுத்து சொன்னா கடிக்க வராங்க.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

  சுச்சி பெட்டர்

  சுச்சி பெட்டர்

  பிக்பாஸின் தலைவி அர்ச்சனா அம்மா விட இந்த சுசித்ரா நல்ல பொண்ணுதான்.. உள்ளம் முழுவதும் விஷத்தை வைத்து நடித்துக்கொண்டு இருக்கின்றாள் அர்ச்சனா அம்மா... ஆனால் இந்த சுச்சிக்கு நடிக்க தெரியல்ல பாவம் வெளிப்படையா எல்லாவற்ரையும் பட்டு பட்டுன்னு சொல்லிடுது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

  கலாய்க்குறாராம்

  கலாய்க்குறாராம்

  இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி முருகதாஸுக்கு வாரம் வாரம் அவமானப்படுறதே வேலையா போச்சு. ஆனா என்ன அவமானம் பட்டாலும் மறுபடியும் எதாவது கிறுக்குத்தனம் பண்ணிட்டு தான் இருப்பான். கமல்ஹாசன் உள்ள பாலாஜியை எடுத்துக்காட்டா வச்சு வெளிய இருக்குறவங்கள கலாய்க்குறாராம்

  என்று குறிப்பிட்டுள்ளார்.

  என்று குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Netizens reactions over Biggboss today's first promo. Kamal talks Balaji who breaks the rules in the biggboss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X