Don't Miss!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கமலிடம் சிக்கி சின்னாபின்னமான அனிதா.. பேசாம சன் டிவியிலேயே இருந்து இருக்கலாம்.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத்தை நடிகர் கமல் இன்று கலாய்த்ததை பார்த்த நெட்டிசன்கள் சன் டிவியிலேயே இருந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், வந்த நாள் முதலே ஓவராக ரியாக்ட் செய்து இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார்.
எல்லாவற்றுக்கும் அழுது அழுது காரியத்தை சாதித்த வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வசவுகளை வாங்கி குவித்துள்ளார் அனிதா.
ஸ்பேஸ் இல்லங்றதுதானே அவங்க பிரச்சனையே.. அனிதாவை கதற கதற கலாய்த்த கமல்.. ஆர்ப்பரித்த ஹவுஸ்மேட்ஸ்!
அனிதா டிராமா
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் அவர் போட்ட டிராமாவை வைத்து கமல் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செய்தி வாசிப்பாளராகவே இருந்திருக்கலாம், பெயராவது மிஞ்சியிருக்கும் என கூறியுள்ளனர்.
இருண்டதெல்லாம் பேய்
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன். அரண்ட அனிதாவுக்கு இருண்டதெல்லாம் பேய் தானோ! என கேட்டுள்ளார்.
ஆட்டைய போட் பிக்பாஸ்
இந்த வாரம் பிக்பாஸில் எவிக்ஷன் இல்லை என்று கேள்விப்பட்ட இந்த நெட்டிசன், நாங்க போட்ட ஓட்டுகளையெல்லாம் ஆட்டைய போட்ட பிக்பாசு!... இது சரியா உனக்கு என கேட்டுள்ளார்.
பேசிக்கிட்டே இருக்கும் போல
மற்றொரு நெட்டிசனான இவர், தூங்கும்போதுகூட பேசிக்கிட்டே இருக்கும் போல இந்த அனிதா!... செய்தி வாசிப்பு பைத்தியம்! என விளாசியிருக்கிறார்.
பட்டும் படாம..
அனிதா சம்பத் பேசாம சன் டீவிலேயே இருந்து இருக்கலாம்.. கமல்ஹாசனுக்கு ஈசி டார்கெட் கலாய்க்குறது கை வந்த கலை.. அதே கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளுங்க கிட்ட பட்டும் படமா பேசிட்டு போயிடுவார்.. அரசியலிலும் அது தான் நடக்குது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
வாய் கொஞ்சம் ஜாஸ்தி
மற்றொரு நெட்டிசனான இவர், அங்க உள்ள பல மிச்சர் தின்னிங்களுக்கு இவ இவ்ளோ தேவலாம். என்ன வாய் கொஞ்சம் ஜாஸ்தி. மற்ற படி திறமைசாலி தான் என கூறியிருக்கிறார்.
சிரிச்சுக்கிட்டே சம்பவம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிரிச்சு கிட்டே சம்பவம் பண்றதுல நீங்க தல சிரிச்சுக்கிட்டே சமாளிக்க அனிதா என கூறியுள்ளார்.
என் நிலைமை..
அனிதாவை கமல் கலாய்ப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா மனநிலை: ஐயோ என் நிலைமை அவளோ தானா என கூறியுள்ளார்.
ஷிவானி மாதிரி
மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா அடுத்த இரண்டு வாரம் ஷிவானி மாதிரி இருக்குற இடம் தெரியாம இருந்துருமா அப்ப தான் இன்னும் இரண்டு வாரம் எக்ஸ்ட்ராவா உள்ள இருக்கலாம் என கூறியிருக்கிறார்.
ஒரே கன்பியூசனா இருக்கே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பொண்னு உண்மையிலேயே லூசா இல்ல லூசுமாதிரி நடிக்கிறாளா ஒரே கன்பியூசனா இருக்கே என கூறியுள்ளார்.
மத்தத எபிசோட்ல
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா பேசுறத அன்சீன்ல போட்டுட்டு மத்தத எபிஸோட்ல போடுடா டேய் என பிக்பாஸுக்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்கா நாடகக்காரி
மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா ஒரு பக்கா நாடகக்காரி . சாங் போட்டா எல்லோர் முன்னாடி வந்து நல்லா நின்னு கேமரா முன்னாடி ஆடுவார் என தோலுரித்துள்ளார்.