இந்த சீன் இங்கே வேண்டாம்.. சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.. மீராவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்ட நாற்று நடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
சர்ச்சை நாயகியான மீரா மிதுன் என்ன செய்தாலும் அதனை கிண்டலடிப்பதே நெட்டிசன்களுக்கு வாடிக்கையாகி விட்டது. அண்மையில் திருச்சிச அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் இறந்தபோது கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள் நடிக்காதீர்கள் என்றனர். கூடவே தமிழக அரசையும் அவர் விமர்சித்ததால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் சரவணன் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட மீரா மீதுன், அந்தப் பகுதியில் வயலில் இறங்கி நாற்று நட்டார்.

வீடியோவிலேயே தெரிகிறது
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி ஒரு விளம்பரம் தேவையா என்றும் விளம்பரத்திற்காகதான் இதை செய்திருக்கிறீர்கள் என்பது வீடியோ வெளியிட்டதிலேயே தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் பாராட்டு
மேலும் வீடியோவை பார்த்து கிண்டலடித்த நெட்டிசன்கள், தமிழ்ச்செல்வி என்று பெயரை வைத்துக் கொண்டு நாற்று நடவில்லை என்றால் எப்படி என கேட்டுள்ளனர். அதேநேரம் அவரின் இந்த வேலையை சிலர் பாராட்டியும் வருகின்றனர்.
பூவாயி மொமென்ட்
தட் ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வச்சேன் நான் பூவாயி மொமென்ட் என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.
அமானுஷ சக்தி
சரக்கு சிகரெட் புடிச்ச கையாள நெல் நாத்த தொடுது அமானுச சக்தி என்று திட்டுகிறார் இந்த நெட்டிசன்.
அழகான வேலை
நல்ல வேலை மீரா. அது ஒரு அழகான வேலை. நான் கூட ரொம்ப படிச்சிட்டு வேலை இல்லாம அந்த வேலைய தான் பாக்கறேன். ரொம்ப ஜாலியா இருக்கும் விவசாயம் பாக்கறது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்
சாயம் வெளுத்து போச்சு
தமிழ்செல்வின்னு பெயர் வச்சிக்கிட்டு வானத்துல இருந்து பிறந்த வந்த மாதிரி விவசாயம் பத்தி ஒன்னும் தெரியாத மாதிரி சீன் போடுற வித்தை இங்கே வேணாம்.. உன் சாயம் வெளுத்து பல நாள் ஆயிடுச்சு என்று திட்டுகிறார் இந்த நெட்டிசன்.
என்ன அர்த்தம்
தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்துக்கொண்டு நாத்து நட தெரியவில்லை ஏன்றால் என்ன அர்த்தம்? என்ற கேட்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











