அன்சீனாவே இருக்கட்டும்.. மறந்துபோய் பிக்பாஸ்ல போட்றாதீங்க.. நெட்டிசன்ஸ் வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவலில் வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவிலும் ரியோவை மட்டுமே மையப்படுத்தி காட்டியுள்ளனர். அதில் ஹெல்த் செக்கப்புக்கு சென்று வந்த ஹவுஸ்மேட்ஸிடம் போட்டு வாங்க முயற்சிக்கிறார் ரியோ.
இதனை பார்த்த பிக்பாஸ் ரியோவை லிவிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் போய் உட்கார சொல்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ரியோ மற்றும் அன்பு கேங்கை மட்டுமே புரமோவில் காட்டுகிறீர்களே என பிக்பாஸை கலாய்த்துள்ளனர்.

உங்கள் புராடெக்ட்ஸ்
பெரும்பாலான அன்சீன் புரமோக்கள் ரியோ அல்லது அன்பு கேங்கின் மொக்கையாகவே உள்ளது. உங்கள் புராடெக்ட்டுகளை மட்டுமே நீங்கள் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்பதை மிகத் தெளிவாகச் செய்ய வேண்டாம் என சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சோம் எங்கே மேன்?
அன்சீன் புரமோவை பார்த்த் இந்த நெட்டிசன் சோம் எங்கே மேன்? நீ ஒருத்தன்தான் கொஞ்சம் நியாயமா இருந்த.. சரி இந்த காமெடிலாம் இல்லாம இருக்குறது நல்லது தான் என்று கூறியுள்ளார்.

விஜே மியூஸிக்
அன்சீன்னா ரியோ தான்ப்பா.. மத்த கன்டெஸ்டென்ட்ஸ்க்குலாம் பிஆர்னா, ரியோவுக்கு மட்டும் விஜே மியூஸிக் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சர் சாப்டுறான்
இந்த சீசன்லதான் பிக்பாஸும் சேர்ந்து மிக்சர் சாப்டுறான்.. இந்த கருமத்தலாம் அன்சீன்லாம் கூட போடாதீங்கடா.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மறந்தும் போட்றாதீங்க
அன்சீனாவே இருக்கட்டும்.. மறந்து போய் எபிசோடுல போட்றாதீங்க பிக்பாஸ் என கெஞ்சியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











