திரௌபதியை விட பெரிய சம்பவம் இருக்கும் போல.. ருத்ரதாண்டவம் ட்ரெயிலர்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

சென்னை: ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பழைய வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்து ஆண்டு வெளியான படம் திரௌபதி.

இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
நாடகக் காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக

ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக

இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹிரோவாக நடித்திருந்தார். திரௌபதி படத்தில் சிலம்பம் பயிற்சியாளராக அவர் நடித்திருந்தார்.

வசூலை குவித்த படம்

வசூலை குவித்த படம்

இதற்கு முன்பு பல படங்களில் அவர் நடித்திருந்த போதும் இந்தப் படத்தில் தான் ரிச்சர்ட் ரிஷி மக்கள் மத்தியில் பரிட்சயமானார். 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

அடுத்த படைப்பு ருத்ர தாண்டவம்

அடுத்த படைப்பு ருத்ர தாண்டவம்

இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜியின் அடுத்த படைப்பாக ருத்ர தாண்டவம் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதா ரவி வழக்கறிஞராகவும், தம்பி ராமைய்யா, தீபா ஆகியோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ருத்ர தாண்டவம் யுஏ சான்றிதழ்

ருத்ர தாண்டவம் யுஏ சான்றிதழ்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளும் முடிந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியானது.

அதன்படி ருத்ரதாண்டவம் திரைப் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை கிளப்பும் வசனங்கள்

பரபரப்பை கிளப்பும் வசனங்கள்

இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியானது. இதில் சமூகத்தில் நிலவும் மற்றொரு முக்கிய பிரச்சனை குறித்து பேசப்படும் என தெரிகிறது. மதமாற்றம், சாதி அரசியல் என பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

சைலண்ட் சம்பவம் பண்ணனும்

சைலண்ட் சம்பவம் பண்ணனும்

ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்கள் திரௌபதியை விட பெரிய சம்பவம் இந்தப் படத்தில் இருக்கும் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், வாழ்த்துக்கள் சகோ!! கதை மற்றும் வசனம்-லாம் நல்லா இருக்கு நடைமுறைக்கு கண்டிப்பா தேவை படும்.. ஆனா திரௌபதி மாதிரி இசை, மற்றும் இடம், படம் கொண்டு போற விதம் பழைய படம் மாதிரியே இருக்கு டிஃப்ரன்டா எடுங்க.

#Nayattu மாதிரி சைலண்ட் சம்பவம் பண்ணனும் அந்த படத்த ரீமேக் பண்ணுங்க என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

நாடக காதலி நான் தான்| DRAUPATHI ACTRESS NIVYA INTERVIEW | V-CONNECCT | FILMIBEAT TAMIL
மதம் மாற்றம் பத்தி வருதா

மதம் மாற்றம் பத்தி வருதா

ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன் என்னது படத்துல (PCR மதமாற்றம்னு) வசனம் வருதா நாளைக்கி ஒருத்தன் வழக்கு போடுவான் பாரு, படத்தை தடை பண்ணனும் என்று என நக்கலடித்துள்ளார்.

திரௌபதியை விட பெரிய சம்பவம்

திரௌபதியை விட பெரிய சம்பவம்

மற்றொரு ரசிகரான இவர் திரௌபதியை விட பெரிய சம்பவம் இருக்கும் போல.. கண்டிப்பாக படத்தை தியேட்டரில் வெளிடுங்கள் அப்போதுதான் விழிப்புணர்வு ஏற்படும் நம்மவர்களுக்கு படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

தைரியமாக பேசியதற்கு நன்றி

தைரியமாக பேசியதற்கு நன்றி

மற்றொரு ரசிகரான இவர், இந்த படத்தில் நீங்கள் எடுத்துள்ள கதைக்களம் சிறப்பாக உள்ளது பேச வேண்டியதை தைரியமாக பேசியதற்காக நன்றிகள் வாழ்த்துகள் படம் வெற்றி பெறும் மேலும் இந்த படம் படமாக்கப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது (நாடகம் போல இல்லை) BGM இன்னும் எதிர்பார்த்தேன் Ok Trailer Rating 4/5 என பதிவிட்டுள்ளார்.

யூட்யூப் ட்ரென்டிங்கில் நம்பர் ஒன்

யூட்யூப் ட்ரென்டிங்கில் நம்பர் ஒன்

இதனிடையே ருத்ரதாண்டவம் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகி 24 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் வியூஸ்களை குவித்துள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள படத்தின் இயக்குநர் மோகன் ஜி, ருத்ர தாண்டவம் ஒரு மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது என்றும் யூட்யூப் ட்ரென்டிங்கில் நம்பர் ஒன் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X