சனம்க்கு அனிதா மேல பொறாமை வந்துடுச்சு.. அதான் ரேகாவை வச்சு செய்யுது.. பாயிண்டை பிடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: சனம் ஷெட்டி ரேகாவிடம் நடந்து கொண்ட முறையை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
Recommended Video
நேற்றைய எபிசோடில் ஒன்றுமே இல்லாத பிரச்சனைக்கு சனம் ஷெட்டி ரேகாவை பிடித்து ஏறு ஏறு என ஏறிவிட்டார்.
உதவி செய்த ரேகாவை, அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் கூட மரியாதை கொடுக்காமல் மல்லுக்கு நின்றார்.

முகம் சுளிக்க வைத்தது
அனிதா எப்படி சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நடந்து கொண்டாரோ அதே போல் சனம் ஷெட்டி, ரேகாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை வச்சு செய்தார். ஏற்கனவே வாண்ட்டடாக சனம் ஷெட்டி மற்றவர்களிடம் பழகுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், நேற்று ரேகாவிடம் அவர் நடந்து கொண்ட முறை பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

எலிமினேட் பண்ணுங்க
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். சனம் ஷெட்டி ரொம்ப ரூடா நடந்து கொள்கிறார். எல்லோரின் கவனமும் அவர் மீது இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். நான் அவரை ஜட்ஜ் பண்ணவில்லை. ஆனால் அவர் முறையாக நடந்து கொள்ளவேண்டும். அடுத்தமுறை அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம். சனம் ஷெட்டியை எலிமினேட் பண்ணுங்க பிக்பாஸ்.
என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

டேமேஜை குறைக்க
சனம் மேலும் டேமேஜை குறைக்க அடுத்த சில நாட்கள் அமைதியாக இருக்க வேண்டும்... கேமராவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருப்பதால், மக்கள் என்ன நினைப்பார்கள், அவள் எப்படி உணரப்படுவாள் என்று நினைக்கிறாள், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கையாள்வதற்குப் பதிலாக, அதை நோக்கி வேலை செய்கிறார் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ரேகாவ அடிச்சு
சனம் ஷெட்டியோட கேம் பிளான்.. அனிதா லாங்குவெஜ்ல சொல்லனும்னா.. ரேகாவ அடிச்சு புரமோல வரலாம்முன்னு முடிவு பண்ணிருச்சு.. புரமோலயும் வந்துருச்சு.. சுரேஷ் சக்கரவர்த்தி வயக்குக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் பெருந்தன்மையா போகலாம்.. ஆனா ஓல்டு ஸ்டைல் மாமியார் மாதிரி ஆகிட்டாரு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அடுத்து சனம்
முதல்ல அனிதா சம்பத்த வெளியே விரட்டனும்.. அடுத்து சனம் ஷெட்டியை வெளியே விரட்டனும்.. அனிதா செய்த சில்றத்தனமான வேலைகளை பார்த்த பிறகு மனசே மாறிடுச்சு.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எரிச்சலாக்குகிறார்..
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியின் நடவடிக்கையை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், அனிதாவுக்கு அடுத்து ரொம்ப எரிச்சல் படுத்தும் நபராக சனம் ஷெட்டியை வரவேற்கிறோம் என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பலிகடாவாக்கிவிட்டார்
சனம் ஷெட்டி தேவையில்லாமல் சர்ச்சைகளை தூண்டி விடுகிறார். சனம் ஷெட்டிக்கு அனிதா சம்பத்தை பார்த்து பொறாமை வந்துவிட்டது, அவர் மட்டும் ஃபோகஸ் செய்யப்படுகிறாரே என்று.. அதனால் தான் ரேகாவை பலிகடாவாக்கிவிட்டார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











