ஷிவானிக்கு ஏதோ வில்லங்கமான ஈமோஜ் போல பாஸ்.. அங்க தட்டினா இங்க வலிக்கும் போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது எபிசோடை பார்த்த நெட்டிசன்கள், மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் வைல்டு கார்ட் என்ட்ரியாகியுள்ள சுச்சித்ரா ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தை வழங்குகிறார்.
இப்படிதான் அர்ச்சனாவும் வந்த வேகத்தில் ஆளுக்கொரு பட்டத்தை கொடுத்தார். இந்நிலையில் அவரது ஸ்டைலில் சுச்சியும் கொடுத்துள்ளதால் நெட்டிசன்கள் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அட்டகாசத்தை ஆரம்பித்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதேபோல்தான் பட்டம் கொடுத்து இந்த அர்ச்சனாவும் தன் அட்டகாசத்தை ஆரம்பித்தது!... இப்ப இந்த சுச்சியும் கொடுக்குது! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
150 நாட்களுக்கு மேல்
போற போக்க பாத்தா இந்த நிகழ்ச்சி 100 நாட்களில் முடியுற மாறி தெரியல. ஒன்னு போனா ஒன்னு வந்துட்டே இருக்கு. இந்த நிகழ்ச்சி 150 நாட்களுக்கு மேல் போகும் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
ஃபில்லப் பண்றீங்களே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆட்கள் எண்ணிக்கை குறைய குறைய மீண்டும் ஃபில்லப் பண்றீங்களே.. ஏன் பிக்பாசு ஏன்? என நக்கலாய் கேட்டுள்ளார்.
வலிக்கும் போல..
சுச்சி பட்டம் கொடுத்ததை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானிக்கு ஏதோ வில்லங்கமான எமோஜ் போல பாஸ்..
அங்க தட்டினா இங்க வலிக்கும் போல என பாலா முறைத்து பார்க்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கூல் ஸ்மைலியா..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு எதற்கெடுத்தாலும் கடுப்பாகுற பயில்வானுக்கு கூல் ஸ்மைலி குடுத்துருக்கீங்க!... யோவ் இதுவெல்லாம் ரொம்ப ஓவருய்யா! என கூறியிருக்கிறார்.
ஆரம்பிச்சா நல்லாருக்கும்
இந்த மாதிரி டேக்ஸ் கொடுத்தே எல்லாரையும் கன்ஃபியூஸ் பண்ணி விட்டிருங்க.. அர்ச்சனா எல்லாருக்கும் கொடுத்தாங்க, இப்போ அவங்களுக்கே கொடுக்க ஒருத்தவங்க வந்துட்டாங்க.. இப்போவாது சில பேரு என்ன சொல்ல வராங்கன்னு புரிஞ்சுக்கிட்டு அவங்களோட கேம்ம தனியா ஆட ஆரம்பிச்சா நல்லாருக்கும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











