வாளு போய் கத்தி வந்தது டும்டும்டும்.. அவ்வளவு ஆபத்தான ஆளா இந்த கன்டெஸ்ட்டன்ட்?!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர் குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக சர்ச்சை பிரபலமான பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார்.

இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் சுசித்ராவின் வருகை உறுதியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குடோன்ல விட்டுட்டாங்க..

குடோன்ல விட்டுட்டாங்க..

புரமோவில் சுசித்ரா வருகையை பார்த்த இந்த நெட்டிசன் இன்னாடா இது வேலியில போற ஓணானை புடிச்சி பிக்பாசு குடோன்ல விட்டுட்டாங்க! எங்கெங்க யார்யாரை குடைய போகுதோ தெரியலையே!. என கூறியுள்ளார்.

கத்தி வந்தது டும்டும்..

கத்தி வந்தது டும்டும்..

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் வாளு போய் கத்தி வந்தது டும்டும்.. இது ஒரு மார்க்கமான ஆளாச்சே! என கூறியுள்ளார்.

ஓவியா மாதிரியே இருக்கு

ஓவியா மாதிரியே இருக்கு

மற்றொரு நெட்டிசனான இவர், எனக்கென்னமோ சுசித்ராவை பார்க்கும் போது ஓவியா மாதிரியே இருக்கு
உங்களுக்கு எப்படி இருக்கு மக்களே!!!? என கேட்டுள்ளார்.

சும்மா கிறுகிறுன்னு!

சும்மா கிறுகிறுன்னு!

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் அர்சனாவுக்கும், பயில்வானுக்கும் இனி தலை சுத்தும்!.... சும்மா கிறுகிறுன்னு! என கிண்டலடித்துள்ளார்.

ஓவியாவை நினைவுப்படுத்துகிறது

ஓவியாவை நினைவுப்படுத்துகிறது

இரண்டாவது புரமோவில் இந்த சுச்சி ஓடிவர்றது குதிக்கிறது முகத்தை மூடறது!. பேசறது.. எல்லாமே கொஞ்சம் ஓவியாவை நினைவுபடுத்துகிறது! இந்த சுச்சிக்கு இது ஒரு ஸ்டேட்டர்ஜியா இருக்குமோ? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஃபினிஷிங் எப்படி இருக்க போகுதோ?

ஃபினிஷிங் எப்படி இருக்க போகுதோ?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ட்ரி எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா பினிஷிங் எப்படி இருக்க போதோ என கேட்டுள்ளார்.

நானைக்கு தெரிந்துவிடும்

நானைக்கு தெரிந்துவிடும்

மற்றொரு நெட்டிசனான இவர் இந்த சுச்சி இனி சுரேஷ்க்கு பேத்தியா? மகளா? அர்ச்சனாவுக்கு குழந்தையா? மகளா? பயில்வானுக்கு அக்காவா? தங்கையா?... அய்யோ ஒரு குழப்பமா இருக்கே!... சரி சரி நாளைக்கு தெரிந்துவிடும்! என கிண்டலடித்துள்ளார்

சோமுக்கு பல்ப் எரிஞ்சிது..

சோமுக்கு பல்ப் எரிஞ்சிது..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சுசித்ரா உள்ள வந்ததும் சோம் சேகர் மூஞ்சில பல்ப் எரிஞ்சதப் பார்த்தீங்களா என கேட்டுள்ளார்.

இனிமேதான் ஆரம்பம்

இனிமேதான் ஆரம்பம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது வெறும் முதல் அத்தியாயம் தான்.. கதை இனிமே தான் ஆரம்பம்.. இருக்கு என்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X