கல்லு போல இருந்த மனுஷன்யா பாலாஜி.. அவரை குழந்தை போல அழ வச்சுடுச்சு அர்ச்சனா.. கொதிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Unseen Video | Day 23 • 'என்ன நினச்சினு இருக்க' Shivani ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் அர்ச்சனாவும் ரியோவும் சேர்ந்து பாலாஜியை கார்னர் செய்வது தெரிந்தது.

ஹவுஸ்மேட்டுகளுக்கு முன்னால் அசராமல் பதில் சொன்ன பாலாஜி கார்டன் ஏரியாவில் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுகிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வாய் சவடால்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தன் அன்றாட வேலையையே செய்ய முடியல!... இந்த பயில்வான் வெறும் வாய் சவடால்தான்! என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஃபீல் பண்ண மாட்டாரு

பாலாஜி முருகதாஸ் மேலயும் தப்பு இருக்கு இல்லனா அவர் இப்படி பீல் பண்ணமாட்டார். ஆனா ஒன்னு எப்பிசோடு பாக்காம எவன் நல்லவன் கெட்டவன்னு ட்வீட் போடவே கூடாது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மகாராஜா டாஸ்க்

நான் கேப்டன் ஆனா எல்லாரையும் மாவாட்ட வைப்பேன் என்று பாலா கூறியதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், ஐஸ்வர்யாவுக்கு கொடுத்த மகாராணி டாஸ்க் மாதிரி பாலாவுக்கு மகாராஜா டாஸ்க் கொடுக்கப் போறாரு பிக்பாஸ் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?

மற்றொரு நெட்டிசனான இவர் பயில்வான் கேப்டன் ஆனா எப்படி எல்லோரையும் அம்மி அரைக்கவுடுவாரு? என்ன அவரு அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? என கேட்டுள்ளார்.

ரொம்ப நல்லது

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பயில்வான், அனிதா, சனம் இவங்கயெல்லாம் நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது ரொம்ப நல்லது! என பதிவிட்டுள்ளார்.

அழ வச்சுடுச்சு அர்ச்சனா

புரமோவில் பாலாஜி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், கல்லு போல இருந்த மனுஷன்யா பாலாஜி, அவரை குழந்தை போல அழ வச்சுடுச்சு அர்ச்சனா.. என கொதித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X