சும்மாவே சண்டை போடுவாங்க இதுல பேசுனதையே மறுபடியும் பேச ஒரு டாஸ்க்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற சண்டைதான் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
என் பின்னால் ஏன் உதைத்தாய் என்று பாலாஜியும் என்னை ஏன் தறுதலை என்று சொன்னாய் என சனம் ஷெட்டியும் மல்லுக்கு நின்றனர்.

சூடு பறந்த எபிசோட்
பாலாஜி உதைத்ததையே திருப்பி திருப்பி சொன்னதால், வேண்டுமென்றால் நீயும் உதைச்சுட்டு போப்பா என்று இடுப்பை காட்டினார் சனம் ஷெட்டி. இதனால் நேற்றைய எபிசோடே சூடு பறந்தது.

முதல் புரமோ டாஸ்க்
இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் புரமோவிலும் அந்த பிரச்சனையையே மீண்டும் பேசும்படியாக டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டை நீதிமன்றமாக்கி அங்கு நடைபெறும் சண்டைகளை சுச்சியை விசாரிக்க கூறியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

அடிக்க ஓடுகிறார்
பாலாஜியின் நேற்றைய பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், பெண்ணை அடிக்க ஓடுவதுடன் இழிவாக பேசி பயமுறுத்தும் இந்த பயில்வானை உடனே வெளியேற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெஷம் சனம் ஷெட்டி
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜியை வாடா போடா என்றும் எட்டி உதைத்து விளையாடும் இந்த வெஷம் சனம் ஷெட்டியை முதலில் வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி..
மற்றொரு நெட்டிசனான இவர், தமிழ் பிக்பாஸ் நடைபெறுகிறது.. ஆனால் அங்கே உள்ளவர்கள் கூட கதைப்பது ஆங்கிலம்!!! பிக்பாஸ் முதலில் எல்லோரையும் தமிழில் கதைக்க சொல்லுங்கள்!!! சுச்சி சும்மா சொல்லக்கூடாது பெட்ரோல் ஊத்தி பற்ற வைத்துள்ளார்.

பயில்வான் ஜந்து
மற்றொரு நெட்டிசனான இவர், இந்த பயில்வான் ஜந்துவை எந்த காட்டிலிருந்து பிடித்து வந்தீர்கள்? எல்லோரையும் கடிச்சி கடிச்சி வைக்கிறதே பிக்பாசு!.. என கூறியுள்ளார்.

ஜெயிலுக்கே போறேன்..
சனம் ஷெட்டி நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த நெட்டிசன், தர்ஷன் எனும் மானஸ்தன் சனம் ஷெட்டியிடம் இருந்து தப்பித்து விட்டான். ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை உன் கூட சேர மாட்டேனு சொல்லி எஸ்கேப் ஆயிட்டான். சரியான முடிவு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மறுபடியும் பேச ஒரு டாஸ்க்
பேசி பேசியே சண்டை வண்டி வண்டியாக வளர்க்கும் பிக்பாஸ் தமிழ் 4, அடேய் எடிட்டர்ஸ் சும்மாவே அவங்க சண்டை போடுவாங்க இதுல பேசுனதையே மறுபடி பேச ஒரு டாஸ்க். முதல்ல இந்த கிரியேட்டிவ் டீம்ம எவிக்ட் பண்ண வழியிருக்கா குருநாதா! என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நமத்துப்போன பட்டாசு
பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்பா டேய் பாலாஜி இந்த எட்டி உதைச்சத மட்டுமே நீ சொல்லிட்டு இருந்தா சுரேஷ் மேல சனம் பண்ண கம்பிளைன்ட் மாதிரி உன் கம்பிளைன்ட்டும் நமத்து போன பட்டாசு மாதிரி ஆகிரும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











