இந்த கர்மத்துக்கா இவ்ளோ லேட்டு? இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. காண்டான ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையில் மலரும் காதல் குறித்து காட்டப்பட்டது.

ஷிவானி பாலாஜிக்கு ஊட்டி விடுவது, அவருக்கு மசாஜ் செய்வது என காதல் சொட்ட சொட்ட உள்ளது செகண்ட் புரமோ.

வில்லங்கமாய்..

வில்லங்கமாய்..

இந்த புரமோ வர கொஞ்சம் தாமதமானது. புரமோ வருவதற்கு கொஞ்சம் லேட்டாகும் என விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இதனால் ஏதோ வில்லங்கமாய் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளது. அதனால்தான் லேட் ஆகிறது என்று நினைத்தனர் ரசிகர்கள்.

இவ்ளோ லேட்டு?

இவ்ளோ லேட்டு?

ஆனால் வெளியான இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர். இந்த புரமோவுக்கா இவ்ளோ லேட்டு? என்றும் இதற்கு ஷிவானி மிக்சரே சாப்பிடலாம் என்றும் கூறி கடுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

செட்டை நொறுக்கிட்டாப்ல..

செட்டை நொறுக்கிட்டாப்ல..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரோமா லேட்டா வர்றதனால நான் என்ன நினைச்சேன்னா... இந்த பயில்வான் அட்டகாசம் பண்ணி செட்டை நொறுக்கிடாப்ல!... அதனால வெளியே பயில்வானை அனுப்பிடாங்கன்னு நினைச்சுட்டேன்!... என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தனி அறையில் போடுங்க

தனி அறையில் போடுங்க

பிக்பாஸின் இரண்டாவது புரமோ வருவதற்கு தாமதமானதால் கடுப்பான இந்த நெட்டிசன், வர வர இந்த புரமோ எடிட்டர் டைம் கீப் அப் பண்றதில்ல, இவன முதல்ல தனி அறையில் போடுங்க பிக்பாஸ் என கூறியுள்ளார்.

வேறு வழியில்ல..

வேறு வழியில்ல..

மற்றொரு நெட்டிசனான இவர் இந்ந புள்ள பூச்சிங்க ஷிவானி, ஆஜித்துக்கு வேறு வழி தெரியல!... இனி இதுதான் வழி! என புரமோவை பார்த்து கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பாவமா இருக்கு

பாவமா இருக்கு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி உனக்கு தெரிஞ்ச வேலையை நல்லா பாக்குற.. பாலாஜி முருகதாஸ் சப்போர்ட்டர்ஸ் இதுக்கும் எதாவது காரணம் வச்சி இருப்பானுங்களே.. உங்க நிலைமையை நினைச்சாத்தன் பாவமா இருக்கு எல்லாத்துக்கும் நீங்க முட்டு குடுக்கணும் என கூறியுள்ளார்.

இதுக்கா இவ்ளோ லேட்டு?

இதுக்கா இவ்ளோ லேட்டு?

நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு வந்த பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தூ... இந்த கர்மத்துக்கா இவ்ளோ லேட்டு? என கேட்டுள்ளார்.

மிக்சர் சாப்டலாம்

மிக்சர் சாப்டலாம்

புரமோவில் ஷிவானி பாலாஜியுடன் காதல் வயப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த இழவுக்கு ஷிவானி மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்திருக்கலாம் என பங்கம் செய்துள்ளார்.

வான்ட்டடா லவ் சீன்

வான்ட்டடா லவ் சீன்

புரமோவில் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் காதல் வருவதாக காட்டப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், டே... டே... சத்தியமா இதையேல்லாம் பார்க்க முடியலடா... கொடுமைடா!... வான்ட்டடா லவ் சீனை கொடுக்குறீங்க!... சகிக்கில! என விளாசியுள்ளார்.

சீன் போட்டியா

சீன் போட்டியா

பிக்பாஸின் இரண்டாவது புரமோ பார்த்த இந்த இதுக்குதான் இவ்ளோ நேரம் சீன் போட்டியா புரமோ எடிட்டர் என கேட்டுள்ளார்.

கன்றாவிய போடதான்

கன்றாவிய போடதான்

இந்த கன்றாவிய போட தான் இவ்வளவு நேரமா.. நானும் சண்டைல மண்டை உடைஞ்சிருக்குமோ என்ற லெவெல்ல யோசிச்சன் போங்கடா நீங்களும் உங்க புரமோவும் என சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.

பருத்தி மூட்டை..

பருத்தி மூட்டை..

த்தூ இத தான் இவ்வளவு நேரம் ஒட்டிக்கிட்டு இருந்தியா... இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்... என பிக்பாஸின் இரண்டாவது புரமோவை கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X