Just In
- 1 hr ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 2 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 2 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 4 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- News
4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காலம் போன கடைசியில வின் பண்ணி என்ன யூஸ்.. வெளியே அனுப்பிட்டாங்க.. ஷிவானிக்காக பீலாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஃபீலாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் தொடங்க உள்ள நிலையில் கடைசி எவிக்ஷன் வாரமான இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த இந்த 97 நாட்களில் ஷிவானி இந்த வாரம் தான் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகளில் பிச்சு உதறினார். ஆனால் இதற்கு முன்பு இருந்த அத்தனை நாட்களுமே பாலாஜி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

தரமான போட்டியாளர்கள்
இதனால் ஷிவானியை மிக்சர் மிக்சர் என்றே அழைத்து வந்தனர் நெட்டிசன்கள். சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி போன்றோர் வெளியேற்றப்பட்ட போது கூட ஷிவானி போன்றோரெல்லாம் உள்ளே இருக்கும் போது தரமான போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிட்டீர்களே விளாசினர் ரசிகர்கள்.

எப்போதோ போக வேண்டியவர்
இந்நிலையில் 97வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், எப்போதோ வெளியேற வேண்டியவரை இப்போவாது வெளியேற்றினீர்களே என்று கூறி வருகின்றனர்.

உண்மையாவா?
ஷிவானி வெளியேற்றப்பட்ட தகவலை கேட்ட இந்த ரசிகர், ஷிவானி எலிமினேட் ஆகுறதா சொல்றாங்களே உண்மையாவா என கேட்டுள்ளார்.

பில்டப் கொடுத்து தூக்கிட்டாங்களே
ஷிவானி வெளியேறிய தகவலை அறிந்த இந்த நெட்டிசன், இந்த வாரம் சிங்கப் பெண்ணேன்னு போட்டு பில்டப் கொடுத்து ஷிவானிய தூக்கிட்டாங்களே என புலம்பியுள்ளார்.

காலம் போன கடைசியில்
ஷிவானி எவிக்ட் செய்யப்பட்டதை அறிந்த இந்த நெட்டிசன், காலம் போன கடைசியில ரோப்டாஸ்க்குல வின் பண்ணி என்ன யூஸ் வெளிய அனுப்பிட்டானுங்க என்று ஃபீல் பண்ணியுள்ளார்.

தகுதியானவங்களே போயாச்சு..
ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டதை அறிந்த இந்த நெட்டிசன் மிக்சர் ஷிவானிக்கு இப்போவாது முடிவு வந்ததே.. எப்போவோ போக வேண்டியது.. தகுதியான 3 பேரே போயாச்சு.. என்று பதிவிட்டுள்ளார்.

கேபியை விட நல்லவர்..
மற்றொரு நெட்டிசனான இவர் ஷிவானி எப்போதும் புறணி பேசியதில்லை. சோம் கூட மற்றவர்களை பற்றி பின்னால் பேசியுள்ளார். ஷிவானி பெரிதாக சண்டை போடவில்லை. எப்போதும் அனுசரித்தே சென்றுள்ளார். மற்றவர்களுக்கு மரியதை கொடுத்துள்ளார். கேபியை விடவும் அவருக்கு எப்போதும் நல்ல பெயர்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.