இப்படி ஒரு ஜட்ஜ்மெண்டே பார்த்ததே இல்ல..பாலாவுக்கு சரியான சொம்பு.. சுச்சியை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சுசித்ரா தீர்ப்பு வழங்கியதை பார்த்த நெட்டிசன்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பி தீர்த்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் கோர்ட் டாஸ்க்கே இடம்பெற்றது. பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் இடையிலான கருத்து வேறுபாட்டை தவிர்க்கும் வகையில் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த டாஸ்கிலேயும் சண்டை போட்டுக்கொண்டனர் ஹவுஸ்மேட்ஸ். குறிப்பாக நீதிபதியான சுசித்ரா அப்பட்டமாக பாலாஜிக்கு ஆதரவாக நடந்து கொண்டது தெரிந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சுசித்ராவை கழுவி ஊற்றியுள்ளனர்.
இப்படி ஒரு ஜட்ஜ்மெண்ட்
இப்டி ஒரு ஜட்ஜ்மெண்ட்ட நான் பார்த்ததே இல்ல. இதுக்கு என்னத்துக்கு அவங்க அவங்க ஓபியன கேக்குறா! யாருக்கு யாரு சப்போர்ட்டுன்னு கேட்டுட்டு கேஸ க்ளோஸ் பண்ணவேண்டியதுதானே என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒரு வாரத்திலேயே இரிட்டேட்டாகுது
வொர்ஸ்ட் ஜட்ஜ் சுசித்ரா மேடம் நீங்க பேசாமா வெளியே போயிருங்க.. முதல் வாரத்திலேயே இரிட்டேட் பண்ண ஆரம்பிச்சுட்டிங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒரு சார்பாக இருந்தார்
சுசித்ரா ஜட்ஜ்மெண்ட்.. தெளிவா பார்க்க முடிஞ்சுது.. சனம்க்காக இன்று வருத்தப்பட்டேன்.. நீதிபதியா ஒரு சார்பாக இருந்தார்.. சனமை பேசக்கூடாது என்று சொன்னது போல் அவர் யாரையும் சொல்லவில்லை.. ரம்யா பாண்டியன் ஆர்க்யூமெண்ட்ஸ் ஆன் பாயிண்ட் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
தீர்ப்பு எப்படி வரும்?
ஆரி அர்ஜூனனை வீட்ல எல்லாரும் டார்கெட் பண்றாங்கனு தானே கேஸ் அங்க வந்து இருக்கு, அது உண்மையா இல்லையானு அவங்க கிட்டயே கைய தூக்கி ஓட்டு கேட்டா தீர்ப்பு எப்படி வரும்? என துப்பியுள்ளார் இந்த நெட்டிசன்.
மாண்புமிகு நீதிபதி சுசித்ரா
விவாதம் எல்லாம் இருக்கட்டும். எல்லாரும் கை தூக்குங்க. நான் அத எண்ணி தீர்ப்பு சொல்லிடறேன்.
- மாண்புமிகு நீதிபதி சுசித்ரா.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
ரெடியா வச்சுக்கோங்க
அடேய் சுசித்ரா நீ அடுத்த வாரம் நாமினேஷன் வந்தினா தாராளமா உன்னோட பொட்டி படுக்கையை கட்டி வச்சிக்கோ.. வைல்ட் கார்டு கன்டெஸ்டன்டா வர எல்லாமே வடிகட்டின லூசுங்களாவே வருதுங்க என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
தறுதலைனு திட்டிடுவானு பயமா?
சனம் இடையில் பேசினார் என்று திட்டத்தெரிந்த சுசித்ராவுக்கு பாலாஜி முருகதாஸ் இடையில் பேசும்போது வாயை மூடிட்டு இருந்தது ஏன்..? ஏன் பாரபட்சம்..? அவன் தன்னையும் தறுதலை..தறுதலைனு திட்டிடுவானு பயமா..? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
ரத்தம் கொதிக்குது
இவள் சுசித்ரா எதுக்கு இப்போ இடையில் அனிதா சம்பத்துக்கு கருத்து சொல்ல விடுறாள்
இவள் பாலாஜி முருகதாஸுக்கும் சம்யுக்தாவுக்கும் ரொம்பவே ஃபேவரா நடக்கிறார்..முதலில் இவள தொரத்தி அடிக்கணும்.. ரத்தம் கொதிக்குது என காண்டாகியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒரு இறுதி தீர்ப்பு
மெஜாரிட்டி பார்த்து ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிறது எல்லாம் ஒரு இறுதி தீர்ப்பு? என கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video
ரெட் கார்டு..
என்னங்கடா நடக்குது , பிக்பாஸ் 4ல , இவன் அவன் லாம் பேசறாங்க.. கையத்தூக்கிட்டா அந்த டீமுக்கு ஃபேவரா தீர்ப்பு கொடுக்குறாங்க சுசித்ரா ரொம்ப வொர்ஸ்ட்டா போகுது..
பாலாஜி முருகதாஸ் பக்கத்துல ஷிவானி நாராயணன் இருந்தா எல்லா ஹீரோயிஸம் பண்ணுவார். ரெட் கார்டு வாங்கமா போக மாட்டீங்க.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











