ஆவேசமாய் தரையை தட்டிய ஆரி.. சின்ன மம்மிதான் ஞாபகத்துக்கு வர்றாங்க.. வேற லெவல் காட்டிய நெட்டிசன்ஸ்!

சென்னை: தான் சேவ் செய்யப்பட்டதும் ஆரி ஆவேசமாக தரையை தட்டியது சின்ன மம்மியை ஞாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி முதல் நபராய் சேவ் செய்யப்பட்டார். ஆரி முதல் முறையாய் சேவ் செய்யப்படுவது இது ஒன்றும் புதிதல்ல.

இருந்த போதும் ஹவுஸ் மேட்ஸ் அவரை கடந்த 2 வாரங்களாக வச்சு செய்து வருகின்றனர். ஆரி தப்பானவர் என்று காட்ட எக்ஸ்ட்ரா எஃபோர்ட் போட்டு வருகின்றனர்.

ரொம்பவே காயப்படுத்திவிட்டது

ரொம்பவே காயப்படுத்திவிட்டது

அதிலும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் ஒவ்வொரு ரவுண்டிலும் ஆரியை எப்படி நெகட்டிவாய் காட்டலாம் என்பதில் ரொம்பவே குறியாய் இருந்தனர். குறைகளை கூறும் டாஸ்க் மற்றும் வாக்கியத்தில் பொருத்த வேண்டும் டாஸ்க்குகளில் ஹவுஸ்மேட்ஸ் நடந்து கொண்ட விதம் ஆரியை ரொம்பவே காயப்படுத்திவிட்டது.

மக்களுக்கு பிடித்திருக்கும்

மக்களுக்கு பிடித்திருக்கும்

தான் சரியாகதான் செய்திருக்கிறேன். வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் நான் வெளியேற வேண்டும் என்று நினைத்தால் சந்தோஷமாக வெளியேறுவேன் என்றார்.

ஆவேசமாக அடித்து

ஆவேசமாக அடித்து

இந்நிலையில் ஆரி நேற்று முதல் நபராக சேவ் செய்யப்பட்டதாக அறிவித்தார் கமல். இதனைக் கேட்டதும் வழக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஆரி, பிக்பாஸ் வீட்டின் தரையில் கையை வைத்து ஆவேசமாக அடித்து நன்றி கூறினார்.

சமாதியில் ஓங்கியடித்த சசி

சமாதியில் ஓங்கியடித்த சசி

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியின் இந்த செயல், சசிகலா செய்ததைதான் ஞாபகப்படுத்துவதாக கூறினார். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார்.

அந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு

அந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு

இதனை வைத்து ஏராளமான மீம்கள் அப்போது வெளியானது. இன்னமும் யாராவது சபதம் செய்தால் அந்தக் காட்சியுடன் ஒப்பிட்டு கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில் ஆரி செய்ததையும் அந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரி ரியல் ஹீரோ

ஆரி ரியல் ஹீரோ

ஆரி ஆவேசமாக அடிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், வெற்றி திருமகன்.. அழகிய தமிழ் மகன்.. ஆர் அர்ஜூனன்தான் ரியல் ஹீரோ என பதிவிட்டுள்ளார்.

எத்தனை முறை பார்த்தீங்க?

எத்தனை முறை பார்த்தீங்க?

ஆரி சேவ்டு என கமல் அறிவித்ததும், ஆரி தரையில் ஓங்கி அடித்தார். அந்தக் காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், இந்த சீனை எத்தனை முறை பார்த்தீங்க என கேட்டுள்ளார்.

ஆரிதான் வின்னர்

ஆரிதான் வின்னர்

மற்றொரு நெட்டிசனான இவர், இன்னைக்கு ஷோவுல ஆரி கண்கலங்குனது ஆரி சேவ்டுன்னு சொன்னப்போ வாவ் அப்படி ஒரு பீல்.. இந்த சீசன் வின்னர் ஆரி தான் அதை யாராலையும் மாத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2

ஆரி பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் ஆனதை தொடர்ந்து, ஆரி கேஜி எஃப் சாப்டர் 2 போல் ஃபைனலிஸ்ட்டாக போகிறார் என அந்தப் படத்தின் டீசருடன் ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சின்ன மம்மிதான்

சின்ன மம்மிதான்

தான் சேவ்டு என்று அறிவிக்கப்பட்டதும் ஆரி தரையை ஆக்ரோஷமாக தட்டிய போது, சின்ன மம்மிதான் என் நினைவுக்கு வந்தார் என்று சசிகலா மறைந்த முதல் ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்த போட்டோவை பகிர்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி ஃபயர் மோட்..

ஆரி ஃபயர் மோட்..

ஆரி தரையில் அடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், ஆரி ஃபயர் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X