டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய நிரஞ்சனி.. குட்டி டிரவுஸர்.. கொண்டையில் ஹனிமூன் கொண்டாட்டம்!

சென்னை: நடிகை நிரஞ்சனி அகத்தியன் ஷேர் செய்துள்ள ஹனிமூன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி அகத்தியன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார் நிரஞ்சனி.

ரக்ஷனுக்கு ஜோடியாக

ரக்ஷனுக்கு ஜோடியாக

நிரஞ்சனி இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார். இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாகவும் நடிகர் ரக்ஷனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். பல அதிரடித் திருப்பங்களை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினி பாராட்டினார்

ரஜினி பாராட்டினார்

பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வசூலை வாரி குவித்தது. நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

ரஜினி பேசிய ஆடியோ

ரஜினி பேசிய ஆடியோ

மேலும் தனக்கும் ஒரு கதை ஏற்பாடு செய்யும்மாறும் கூறினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பேசிய அந்த ஆடியோ இணையத்தில் கசிந்து பெரும் வைரலானது.

பிப்ரவரியில் திருமணம்

பிப்ரவரியில் திருமணம்

இதனிடையே நடிகை நிரஞ்சனிக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இடையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் போதே காதல் மலர்ந்தது. இருவரின் காதலுக்கும் இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

இந்நிலையில் கடந்த வாரம் நிரஞ்சனி மாலத்தீவில் இருந்த போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஹனிமூன் கொண்டாட்டமா என கேட்டுவந்தனர். மேலும் தேசிங்கு பெரியசாமியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் கூறி வந்தனர்.

குட்டி ட்ரவுஸரில்..

குட்டி ட்ரவுஸரில்..

இந்நிலையில் நிரஞ்சனி மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தொடை வரை உள்ள குட்டி ட்ரவுஸரை அணிந்துள்ள நிரஞ்சனி, ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷர்ட்டில் பீச் மணலின் விளையாடுகிறார்.

கணவருடன் சேர்ந்து..

கணவருடன் சேர்ந்து..

நிரஞ்சனியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், க்யூட் என வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து சில போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அடுத்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்பீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X