தயவுசெஞ்சு அந்த டெம்ப்லெட்டை மாத்துங்க...பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் என நம்பி இந்திய சினிமாவே பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறது. படம் பற்றி ஏதாவது தகவல் வராதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

செப்டம்பர் 30 ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு சமீபத்தில் துவக்கி உள்ளது. வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளனர்.

தினம் ஒரு போஸ்டர்

தினம் ஒரு போஸ்டர்

மோஷன் போஸ்டர் தானே வெளியிடுகிறார்கள். டீசரோ, டீசர் வெளியிடும் தேதியை சொல்லவில்லையே என ரசிகர்கள் ஏக்கத்துடன் குறிக் கொண்டிருக்கையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்தில் முக்கிய கேரக்டர்களின் போஸ்டரை தனித்தனியாக வெளியிட்டு வருகின்றனர். அதுவும் தினம் ஒரு போஸ்டர் என வெளியிட்டு, அனைவரையும் இதை பற்றியே பேச வைத்து விட்டனர்.

 சர்ச்சையான விக்ரமின் போஸ்டர்

சர்ச்சையான விக்ரமின் போஸ்டர்

முதலில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரமின் போஸ்டர் வெளியிடப்பட்டது. குதிரை மீது அமர்ந்திருக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், விக்ரம் நெற்றியில் அணிந்திருந்த நாமம் சர்ச்சையானது. சைவ - வைணவ பிரச்சனையை கிளப்பியது.

என்னப்பா எல்லாம் ஒரே மாதிரி இருக்கு

என்னப்பா எல்லாம் ஒரே மாதிரி இருக்கு

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த கார்த்தியின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுவும் விக்ரமின் போஸ்டரை போலவே ஆர்ச் போன்ற பேக்கிரண்ட், முன்புறம் படைகள் இருக்க, குதிரையில் வருவது போல் அமைக்கப்பட்டது. சரி போர் வீரர்கள் என்பதால் இப்படி போஸ்டர் டிசைன் செய்திருக்கிறார்கள் என ரசிகர்கள் சமாதானப்படுத்திக் கொண்டனர்.

இதுவும் அது போலவே தான் இருக்கு

இதுவும் அது போலவே தான் இருக்கு

இந்நிலையில் இன்று நந்தினி கேரக்டரில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுவும் அதே போன்ற ஆர்ச் பேக்கிரவுண்ட், போர் படைகள் இருக்கும் டெம்ப்லெட் உடன் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகினர். எல்லாமே காப்பி, பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Recommended Video

Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil
 தயவு செஞ்சு டெம்ப்லெட்டை மாற்றுங்கள்

தயவு செஞ்சு டெம்ப்லெட்டை மாற்றுங்கள்

தயவு செஞ்சு அந்த டெம்ப்லெட்டை மாற்றுங்கள். எல்லா போஸ்டரும் ஒரே போன்று உள்ளது. பொன்னியின் செல்வனின் ஒவ்வொரு கேரக்டரும் தனித்துவமானவை. அதனால் அந்தந்த கேரக்டருக்கு உரிய முக்கியத்துவம் மாறாமல் பிரத்யேக போஸ்டர்களை வெளியிடுங்க. அதை தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். இப்படி கடமைக்கு வெளியிட்டு, படம் மற்றும் கேரக்டரின் முக்கியத்துவத்தை குறைக்காதீர்கள் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X