குட்டி ஸ்டோரி எப்படி? பிச்சு உதறியிருக்காங்க விஜய் சேதுபதியும் அதிதி பாலனும்.. டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: குட்டி ஸ்டோரி படம் குறித்த தங்களின் கருத்துக்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

நான்கு இயக்குநர்கள் சேர்ந்து குறும் படங்களாக நான்கு கதைகளை இயக்கியுள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை இயக்குநர்கள் கவுதம் மேனன், நலன் குமாரசாமி, ஏஎல் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கியுள்ளனர்.

ஆந்தாலஜி படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் நான்கு கதைகளுமே காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கம்

கவுதம் மேனன் இயக்கம்

இதில் கவுதம் மேனன் இயக்கியுள்ள படத்திற்கு எதிர்பாரா முத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவுதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஎல் விஜய்

ஏஎல் விஜய்

ஏஎல் விஜய் அவனும் நானும் என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு லோகம் என்ற டைட்டிலில் ஒரு காதல் கதையை இயக்கியுள்ளார். படத்தில் வருண், சங்கீதா, சாக்ஷி, லுத்புதீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நலன் குமாரசாமி

நலன் குமாரசாமி

நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் ஆடல் பாடல். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று குட்டி ஸ்டோரி படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஆடல் பாடல் அருமை

ஆடல் பாடல் அருமை

படம் குறித்து பலரும் விமர்சனம் எழுதி வருகின்றனர். அந்த வகையில் படத்தை பார்த்த நெட்டிசன்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனார். குட்டி ஸ்டோரி படத்தில ஆடல் பாடல் கதை அருமையாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியும் அதிதி பாலனும் மிரட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டிவிஸ்ட்டுகள் திருப்பங்கள்

படத்தை பார்த்த இந்த நெட்டிசன், குட்டி ஸ்டோரி வித்தியாசமான மற்றும் சுவாரசியமான முதிர்ச்சியான குறுங்கதைகள். சிறப்பாய் உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு நலன் குமாரசாமி இயக்கியிருந்த ஆடல் பாடல் கதைதான் பிடித்திருந்தது. எதிர்பாராத டிவிஸ்ட்டுகளும் திருப்பங்களும் இருந்தன. விஜய் சேதுபதி, அதிதி பாலனின் நடிப்பு செம என்றும் பதிவிட்டுள்ளார்.

வழக்கமான ஸ்டைல்

குட்டி ஸ்டோரி முதல் பாதியில் உள்ள முதலாவது குறும்படம் எதிர்பாரா முத்தம். கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்ல ஃபீல் கொடுக்கும் படம்.. கவுதம் மேனனின் வழக்கமான ஸ்டைல். ரோபோ ஷங்கர் பர்ஃபாமன்ஸ் என எதிர்பாரா முத்தத்தை பாராட்டியுள்ளார். மேலும் இரண்டாவது குறும்படமான அவனும் நானும் மொக்க என்றும் பதிவிட்டுள்ளார்.

லைட் ஃபீல் படம்..

படத்தை பார்த்த இந்த நெட்டிசன், அழகான பேப்பர் கூட.. லைட் ஃபீல் படம்.. குட்டி ஸ்டோரி படம் என பாராட்டியுள்ளார்.

மீண்டும் ஒரு காதல் பர்ஃபாமன்ஸ்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மேலும் ஒரு காதல் பர்ஃபாமன்ஸ் என குட்டி ஸ்டோரி படத்தில் உள்ள ஆடல் பாடல் கதையை பாராட்டியுள்ளார்.

ஆக்டிங் ஆஸம்

குட்டி ஸ்டோரி பெஸ்ட் ஃபீல் - குட் ஆந்தாலஜி காதல் கதை. விஜய் சேதுபதி அண்ணா அதிதி பாலன் ஆக்டிங் ஆஸம் என குறிப்பிட்டுள்ளார்.

காதலர் தின பரிசு

நலன் குமாரசாமியின் ஆடல் பாடல், கவுதம் மேனனின் எதிர்பாரா முத்தம், வெங்கட் பிரபுவின் லோகம், ஏஎல் விஜய்யின் அவனும் நானும்.. நல்ல காதலர் தின பரிசு.. மொத்தமாய் டீசன்ட் வாட்ச். விஜய் சேதுபதி, அதிதிபாலன், அமலா பால் பர்ஃபாமன்ஸ் செம என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X