தம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றையா இரண்டாவது புரமோ பார்த்த நெட்டிசன்கள் ஆஜித்தை பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவின் மூலம் ஆஜித்தும் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

புரமோவில் பேசும் ஆஜித் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற தனக்கே வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்.

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்

மேலும் நாமினேஷன் தொடர்பாக பேசும் ஷிவானி, தன்னை நாமினேட் செய்ய வேற காரணமே இல்லையா என்றும் ஆவேசமாகியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆஜித் குறித்தும் ஷிவானி குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உன்னை சேவ் பண்ணலாம்

உன்னை சேவ் பண்ணலாம்

முதல் புரமோவில் ஆஜித் ஷிவானியை நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானிய நீ நாமினேட் பண்ணதுக்கே உன்னை சேவ் பண்ணலாம் என கூறியுள்ளார்.

வடிவேலு காமெடி

வடிவேலு காமெடி

இப்ப எல்லாரும் என்ன பண்றீங்க மட மடனு ஷிவானிக்கு ஓட்டு போடுறதுக்கு ரெடி பண்ணிக்கிறீங்க, ஏனா ஷிவானி உள்ள இருக்கிற வரைக்கும் தான் நமக்கு அது பிக் பாஸ்... என வடிவேலுவின் காமெடியை வைத்து கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

அரைவேக்காடு ஹவுஸ்மேட்

அரைவேக்காடு ஹவுஸ்மேட்

ஷிவானி : என்ன நாமினேஷன் பண்ண ரீசனே இல்லையா ஏன்மா ஷிவானி நீ பாலா கூட சுத்திட்டு அவனுக்கு பணிவிடை மட்டும் தான் பண்ணுற.. தயவு செஞ்சி நீ வெளிய வந்துருமா..
இப்பாவது இந்த அரைவேக்காடு ஹவுஸ்மேட் உன்ன பண்ணுனாங்களேனு நாங்க சந்தோஷப்படுறோம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வேற காரணமே இல்லையா

வேற காரணமே இல்லையா

தன்னை நாமினேட் செய்ய வேற காரணமே இல்லையா என ஷிவானி பொங்கியதை பார்த்த இந்த நெட்டிசன், செய்யுற விஷயத்த சொல்லாம வேற என்ன காரணம் சொல்ல முடியும்.. இருந்தா சொல்லிட மாட்டாங்களா என விளாசியுள்ளார்.

இதான் குரூப்பிஸம்

இதான் குரூப்பிஸம்

ரம்யா நாமினேஷனில் இடம் பெற்றதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா கேங்குக்கு எதிரா செயல்பட்டதால ரம்யாவ கேங் பூரா சேர்ந்து நாமினேட் செஞ்சிட்டு.. இதான் குரூப்பிஸம்.. என கூறியுள்ளார்.

ரம்யாவுக்கு வந்தா ரத்தம்

ரம்யாவுக்கு வந்தா ரத்தம்

ரம்யா நாமினேஷனுக்கு குரூப்பிசம்தான் காரணம் என்று சக நெட்டிசன் கூறியதை பாரத்த இந்த நெட்டிசன், இதேபோல் தான் ஆரியை இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக வன்மத்தோடு நாமினேட் செய்கிறார்கள். ரம்யா உட்பட.. முதல்முறையா ரம்யாவுக்கு எதிரா ஓட்டு வந்த உடனே இப்படி பேசுறீங்களே. ரம்யாவுக்கு வந்தா ரத்தம் ஆரிக்கு வந்தா தக்காளி சட்னியா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இதுக்கு பேர்தான் என்ன?

இதுக்கு பேர்தான் என்ன?

பாலாவின் ஷேடோவாக இருப்பதாக கூறியதை கேட்ட ஷிவானி வேற காரணமே இல்லையான என கோபப்பட்டுள்ளார். இதனை பார்த்த இந்த நெட்டிசன், எப்பப் பார்த்தாலும் பயில்வான்கிட்ட ஒட்டிகிட்டேதான் திரியற!,... இதுக்கு பேர்தான் என்ன?... சரி... வேற என்னதான் பண்ற நீயே சொல்லு! என கூறியுள்ளார்.

புள்ள பூச்சி ஆஜித்

புள்ள பூச்சி ஆஜித்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்போ.. ஷிவானி ரசிகர்கள் கண்டிப்பாக அவளை காப்பாற்றி விடுவார்கள்!! அதைப்போல ரம்யாவையும் சரி! ஆனால் இந்த வாட்டி புள்ளபூச்சி ஆஜித் தான்!! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போவான்!! என கூறியுள்ளார்.

எங்கேடா போயிருந்தே

எங்கேடா போயிருந்தே

புரமோவில் ஆஜித் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சின்ன கைத்தடி ஆஜித்து இன்னமும் உள்ளதான் இருக்கானா? ... இத்தனை நாளும் எங்கேடா போயிருந்தே என கேட்டுள்ளார்.

தீர்க்கத்தரசி தானோ

தீர்க்கத்தரசி தானோ

புரமோவில் ஆஜித் பேசுவதை பார்த்து தம்பி ஆஜித் உண்மைலையே ஒரு தீர்க்கத்தரசி தானோ! 'என்ன தவிற யாரும் போகமாட்டாங்க' உனக்கே தெரியுது.. இந்த தெளிவு.. ஷிவானி போக வாய்ப்பு இருக்கு நீ போகலன்னா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X