ஆக.. ஆரிதான் வொர்ஸ்ட் பர்ஃபாமர்ன்னு சொல்லப் போறீங்க.. பிக்பாஸ் புரமோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று பெஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு போட்டியாளர் கூட ஆரியின் பெயரை சொல்லவில்லை.

நெட்டிசன்ஸ் விளாசல்
இதனை பார்த்த ரசிகர்கள் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கு ஆரியின் பெயரை சொல்வார்கள் போல என கூறி வருகின்றனர். மேலும் பெஸ்ட் பர்ஃபாமர் என நாமினேட் செய்யப்பட்ட பெயர்களையும் விளாசியுள்ளனர்.

அன்ஃபேர் ரூல்ஸ்
நரிங்களுக்குள்ள டீல் வச்சு காசு பிரிச்சிக்கிட்ட யாருமே பெஸ்ட் பர்ஃபாமருக்கு தகுதியில்ல!! அனஃபேர் ஷேரிங்.. அன்ஃபேர் ரூல்ஸ்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரியை அட்டாக் பண்ணி
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆனா நிஜ நரிகள் எப்போதும் ஆரியைதான் அட்டாக் பண்ணியது, பண்ணிகிட்டுயிருக்கு! என கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

நரிகளோட பிளான்
மற்றொரு நெட்டிசனான இவர், ஆரி கூட சண்ட போட்டா தான் புரமோவுல வர முடியும்..அதான் நரிகளோட பிளான் எனறு கூறிள்ளார் இந்த நெட்டிசன்.

கோரஸ் பாட போகிறார்கள்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆக... ஆரிதான் வொர்ஸ்டு பர்ஃபாமர்னு கோரஸ் பாட போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதான் அவங்க பிளான்
ஆமா.. வொர்ஸ்ட்க்கு ஆரியை தேர்வு பண்ணுவாங்க. அதான் அவங்க பிளான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பயில்வானின் முட்டு
பாலாஜி ஷிவானி பெயரை கூறுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆமாம் ஆமாம் ஷிவானிதான் பெஸ்டு!... ஆமாம்...ரூல்ச பிரேக் பண்ணல!... கேம் விளையாண்டாதானே ரூல்ச பிரேக் பண்றதுக்கு.. பயில்வானின் முட்டு.. பலே முட்டு.. என்று கூறியுள்ளார்.

முட்டையை உடைத்த கோழிகள்
பெஸ்ட் பர்ஃபாமர்லாம் விஷயமே இல்ல.. பஞ்சாயத்து வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கு தான் வெயிட்டிங்.. உண்மையிலேயே வொர்ஸ்ட் பர்ஃபாமர் ஷிவானி, ஆஜித், வெஸல் வாஷிங் டீம் என்றும் இல்லாவிட்டார் முட்டையை உடைக்க உதவிய கோழிகள் ரம்யா பாண்டியன், சோம். வழக்கம்போல் இவங்க ஆரி அனிதாவ சொல்லட்டும் இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பெரிய ஆட்டக்காரங்க
ஷிவானியை பாலாஜி பெஸ்ட் பர்ஃபாமர் என்று கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், பெரிய ஆட்டகாரங்கே ஷிவானி..அதான் 60 நாள் பங்களிப்ப பார்த்தோமே என கலாய்த்துள்ளார்.

எண்டெர்டெய்மெண்ட்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தான்தான் கடுமையான போட்டியாளர்னு நினைத்துகொண்டு இருக்குகிற இந்த ரம்மிதான் நமக்கு செம எண்டர்டெய்ன்மெண்டு! என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











