அர்ச்சனாவின் அழுகுணி ஆட்டம்.. தவிடு பொடியாகிறது அன்பு அணி.. ஜாலி மோடில் நெட்டிசன்ஸ்!
சென்னை: இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா அழுகுணி ஆட்டம் ஆடுவதாக கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா தனது முட்டையை பாதுகாக்க அதன் மீது படுத்து கொள்கிறார்.
அப்போது சோம் அவரது முட்டையை தொட முட்டை உடைந்து விடுகிறது. யார் முட்டையை உடைத்தார்கள் என்று தெரியாத நிலையில் அர்ச்சனா சோமையும் சோம் அர்ச்சனாவையும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆவேசமான அர்ச்சனா
சோம் சொல்வதை ஏற்காத அர்ச்சனா, நீதான் என் முட்டையை உடைத்தாய் என கூற கடுப்பான சோம், அர்ச்சனாவின் உடைந்த முட்டைகளை தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார். இதனால் ஆவேசமாகும் அர்ச்சனா என் படத்தை நீ அப்படி தூக்கி எறியக் கூடாது என கத்துகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா அழுகுணி ஆட்டம் ஆடுவதாக கூறி வருகின்றனர்.

அழுகுணி ஆட்டம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இதுதான் அர்ச்சானாவின் அழுகுனி ஆட்டம்! என்று விளாசியுள்ளார்.

எமோஷ்னல் பிளாக்மெயில்
பிக்சராவது ஃபிலிம் ஆவது! இந்த மாறி டாஸ்க் அப்ப எமோஷ்னல் பிளாக்மெயில் பண்றதே வேலை இந்தம்மாவுக்கு! என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ரொம்ப கோபப்படுறாராம்
புரமோவில் சோம் கோபப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், சோம்மே... ரொம்ப கோபப்படுறாராம்! என கிண்டலடித்துள்ளார்.

அச்சு ரொம்ப நச்சு
புரமோவில் அர்ச்சனா செய்த வேலையை பார்த்த இந்த நெட்டிசன், முட்டை மேல படுத்துக்கிட்டா உடையத்தான் செய்யும். இதுல வைக்கோல் போட்டு மூடிமறைச்சிகிட்டா எப்படி தொட முடியும். நல்லவேளை ரியோ & சோம் ட்ரை பண்ணாங்க. இதுவே பாலா & ஆரி ட்ரை பண்ணி இருந்தா, அங்க தொட்டான் இங்க தொட்டான்னு ஒரு பெரிய டிராமாவே நடந்திருக்கும். அச்சு ரொம்ப நச்சு. என கிழித்துள்ளார் இந்த நெட்டிசன்.

சோமுக்கு கோபம் வந்துருக்கு
இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வரும் சோம் இன்றைய புரமோவில் கோபப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், 73ம் நாள் இரண்டாவது புரோமாவில் சோமுக்கு கோபம் வந்துருக்கு.. என பதிவிட்டுள்ளார்.

தவிடு பொடியாகிறது
புரமோவில் அர்ச்சனா கத்தியதை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்.. அன்பு அணி தவிடு பொடியாகியது அன்பு ஜெயிக்குமா? காத்திருப்பது நாங்க.. அன்னபூரணி அர்ச்சசனா ஆப்பு பல விதம் அதில் இது ஒரு விதம் என கிண்டலடித்துள்ளார்.

தனியா விளையாடுறாராம்!
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா பாருங்க சோம்மேக்கு கோபம் பொத்துகிட்டு வருது!... தனியா விளையிடுறாராம்! என மரண பங்கம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











