குட்டி நயன்தாரான்னு சொன்னதும் போதும்.. அவங்கள மாதிரியே மாறிட்டு வர்றாங்களே இந்த க்யூட் பேபி!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரனின் அசத்தல் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Recommended Video

Queen web series Tamil | Reel & Real Characters | Gautam Vasedev Menon

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல மலையாள படங்களில் குழந்தையாக வலம் வந்துள்ளார்.

தொடர்ந்து அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சிறு வயது நயன்தாரா

சிறு வயது நயன்தாரா

இதில் நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் குமரிப் பெண்ணாகியுள்ளார்.

ஹீரோயின் ஆசை

ஹீரோயின் ஆசை

அடுத்து ஹீரோயினாகதான் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அனிகா கடந்த சில மாதங்களாகவே அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். ஹீரோயின் சான்ஸ்க்காக அவ்வப்போது கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

அடுத்த நயன்தாரா

அடுத்த நயன்தாரா

அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமரா என பிரமித்தனர். சிலர் அதற்காக சமூக வலைதளங்களில் விமர்சனம் கூட செய்தனர். அதே நேரத்தில் பலரும் அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என அவரது அழகை வர்ணித்தனர்.

குட்டி நயன்

குட்டி நயன்

இதனை தொடர்ந்து அஜித்தின் ரீல் மகளாக இருந்த அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றே அழைத்து வருகின்றனர். அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற காம்பினேஷனில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தினார் அனிகா.

ஓணம் செலிபிரேஷன்

ஓணம் செலிபிரேஷன்

அந்த போட்டோக்கள் பல இதழ்களில் அட்டைப்படமானது. அதனை தொடர்ந்து பாவாடை தாவணியில் ஒரு ராணியைப் போல் போட்டோ ஷுட் நடத்தினார். மேலும் தனது தாயுடன் ஓணம் செலிபிரேஷன் போட்டோக்களையும் ஷேர் செய்து அசத்தினார்.

சட்டென பார்க்க..

சட்டென பார்க்க..

இந்நிலையில் வெள்ளை நிற கவுனில் ஃபிரி ஹேர் விட்டப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். நயன்தாரா ஸ்டைலில் முடியை கர்ல் செய்துள்ள அனிகா சட்டென பார்க்க நயன்தாரா போன்றே உள்ளார்.

அழகு பதுமை

அழகு பதுமை

அதனை தொடர்து பச்சை வெள்ளை காம்பினேஷனில் மிடி அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் தனது சகோதரருடன் சேர்ந்து குதூகலமாய் உள்ளார் அனிகா. இதில் அழகு பதுமையாக உள்ள அனிகா இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நயன்தாரா ஹேஷ்டேக்

நயன்தாரா ஹேஷ்டேக்

மேலும் தான் வெள்ளை நிற சேலையில் எடுத்த போட்டோக்களில் சிலவற்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் தனது ஒவ்வொரு போட்டோவுக்கும் #Viswasam #ThalaAjith #அனிகா #Nayanthara ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்.

தவறே இல்லை

தவறே இல்லை

அனிகாவின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் பலர் நயன்தாரா மாதிரியே இருக்கிறீர்கள் என்றும், உங்களை குட்டி நயன்தாரா என்பதில் தவறே இல்லை என்றும் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X