ஒய் பிளட்.. சேம் பிளட்.. ஒன்னும் புரியல.. அனிதா சம்பத் ஸ்டோரி ரிஜெக்டட்.. கதறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தான் கடந்து வந்த பாதையை வழக்கம் போல் கண்ணீருடன் கொட்டி தீர்த்தார்.

Recommended Video

Anitha பண்ணது சரி இல்லதான் அனிதாவின் கணவர் விளக்கம் | Filmibeat Tamil

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தாங்கள் கடந்த வந்த பாதையையும் தங்களின் அனுபவங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு

ஆரம்பிக்கும் போதே குரல் தழுதழுத்து இது அனுதாபத்திற்காக அல்ல என பொறுப்பு துறந்தார். தான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறிய அனிதா தான் கல்லூரி படிக்கும் காலத்தில் பட்ட கஷ்டங்களை கூறினார்.

பஸ்க்கு கூட காசுயில்லை

பஸ்க்கு கூட காசுயில்லை

கல்லூரி படிக்கும் போதே டியூஷன் எடுத்த குடும்பத்தை பார்த்துக்கொண்டதையும் தன் குடும்பத்திற்கு தான்தான் எல்லாமே என்றும் கூறினார். சொந்த வீடு இல்லை என்று ஆதங்கப்பட்ட அனிதா, பின்னர் பஸ்க்கு கூட காசு இல்லாமல் நடையாய் நடந்ததையும் தனக்கு உதவியவர்களையும் கூறினார்.

அட்வைஸ் மழை

அட்வைஸ் மழை

பின்னர் தன்னுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து பேசிய அனிதா, மிடில் கிளாஸில் பிறப்பவர்கள்தான் அதிர்ஷ்டசாலிகள் அவர்களுக்குதான் கஷ்டங்களை தாண்டி வரும் சக்தி உள்ளது. ஆகையால் மிடில் கிளாஸில் பிறப்பதை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என அட்வைஸ் கூறினார்.

ஒய் பிளட் சேம் பிளட்

ஒய் பிளட் சேம் பிளட்

செய்தி வாசிக்கும் போதாவது நிறுத்தி நிதானமாக வாசிப்பார் அனிதா சம்பத். ஆனால் அவரது கதையை படு வேகமாக படபடவென சொல்லி முடித்தார். அவர் பேசியது முக்கால்வாசி புரியவில்லை. இதனால் வெறுப்பான நெட்டிசன்ஸ் ஒய் பிளட் சேம் பிளட் என கலாய்த்துள்ளனர்.

ஸ்டேரி ரிஜெக்ட்டட்

ஸ்டேரி ரிஜெக்ட்டட்

இன்னும் சிலர், உங்கள் மீதான மரியாதை குறைந்து விட்டது. அதனாலோ என்னவோ நீங்கள் சொல்வது பிடிக்கவில்லை, நீங்கள் பேசுவதை பார்க்கவும் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். உங்கள் ஸ்டோரி ரிஜெக்ட்டட் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X