கமல் பேசியபோது அனிதா செய்த காரியம்.. சுரேஷுக்கு மட்டுமல்ல.. கமலுக்கும் அவமரியாதைதான்!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்திக்கு கமல் அட்வைஸ் கூறிய போது அனிதா சம்பத் செய்த செயல் பலரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் போன வேகத்தில் தான் செய்த சில பல வேலைகளால் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பேரையும் கெடுத்துக் கொண்டார்.

குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி விஷயத்தில் அனிதா சம்பத் நடந்து கொண்ட விதம் பலரையும் கோபப்படுத்தியுள்ளது.

ஆராய்ந்த கமல்

ஆராய்ந்த கமல்

முதல் நாள் நடந்த சம்பவத்தை கடந்த வாரம் முழுக்க, கையில் எடுத்துக் கொண்டு கண்ணீரும் கம்பளியுமாய் புரமோவில் இடம் பிடித்தார் அனிதா சம்பத். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று நடிகர் கமல்ஹாசன், ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்து வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் குறித்து ஆராய்ந்தார்.

சின்ன பொண்ணு

சின்ன பொண்ணு

அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மல்லுக்கு நின்ற அனிதா சம்பத்தை கமல் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனிதா சம்பத்தை பட்டும் படாமல் தொட்டுக் கொடுத்த கமல், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சின்ன பொண்ணுதானே விட்டுக்கொடுக்கலாம் என அறிவுரை கூறினார்.

திருந்தவே மாட்ட

திருந்தவே மாட்ட

மேலும் சில விஷயங்களை அறிவுரையாக கூறினார் கமல். அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியை அசிங்கப்படுத்துவது போல் இடையிடையே சிரித்தார் அனிதா. அனிதாவின் சிரிப்பை பார்த்த நெட்டிசன்கள், செம கடுப்பாகி விட்டனர். எதற்கு இந்த சிரிப்பு நீயேல்லாம் திருந்தவே மாட்ட, உன்னை முதலில் வெளியேற்ற வேண்டும் என சூளுரைத்து வருகின்றனர்.

வனிதாவே பரவாயில்லை

அனிதாவின் நடத்தையை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகினற்னர். அனிதா சம்பத்துக்கு ரொம்பவே ஆணவம், கொஞ்சம் கூட மரியாதையில்லை. வனிதா அக்காவாது கொஞ்சம் பாஸிட்டிவிட்டியை காட்டினார்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அதிகமாக கொடுக்கிறார்

அனிதாவும் சுரேஷும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள். ஆனால், சுரேஷிடம் கமல் விசாரித்தபோது அனிதாவின் எதிர்வினை தேவையற்றது, இது சுரேஷுக்கு அவமரியாதை மட்டுமல்ல, கமலுக்கும் கூட. ரியோ சுட்டிக்காட்டியபடி, அவர் தேவையின்றி அதிகமாக கொடுக்கிறார்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆட்டியூட் மாத்தனும்

மற்றொரு நெட்டிசனான இவர், சனம் ஷெட்டி முடியல என்ன இவ்ளோ லென்த்தா பேசுறீங்க.. அனிதா சம்பத் நிச்சயமா உங்களோட ஆட்டியூட் நீங்க மாத்தியே ஆகனும் என அட்வைஸ் கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அப்பாவி இல்ல

அனிதாவின் பிஹேவியரை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா சம்பத் கமல்ஹாசனுக்கு முன்னால் நடிக்கிறார். அவர் ஒன்றும் அப்பாவியும் அல்ல நல்லவரும் இல்ல. கமலிடம் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது அனிதா சம்பத் முகம் எப்படியெல்லாம் போனது.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அவர்தான் சரியான ஆள்

மற்றொரு நெட்டிசனான இவர் அனிதா சம்பத் மாதிரி ஆட்களுக்கெல்லாம் சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற ஆட்கள்தான் கரெக்ட்டான பதிலடி கொடுக்க முடியும்.. என்ன சொல்றீங்க என சக சமூக வலைதள வாசிகளை கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஓட்டு போட மாட்டேன்

அனிதா சம்பத் பிக்பாஸ்க்குள் என்ட்ரி ஆவதை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அவரது நடவடிக்கையை பார்த்து மனதை மாற்றிக்கொண்டேன். அனிதா சம்பத்துக்கு ஒரு போதும் ஓட்டு போட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X