நீங்க என்ன செய்தாலும் எவிக்ஷனில் இருந்து தப்ப முடியாது.. அனிதாவை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள அனிதாவை விளாசி தள்ளியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது.
இதில் பாலாஜியை நாமினேட் செய்யும் அனிதா, அவர் ஷிவானிக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டினார். அனிதா பேசுவதைக் கேட்டு ஷிவானி கண்ணீர் விட்டார்.

இந்த வாரம் நீங்கதான்
மேலும் பாலாஜியுடனும் மல்லுக்கு நின்றார் அனிதா. நீங்கள் எல்லோர் பெயரையும் சொல்வீர்கள் உங்கள் பெயரை யாரும் சொல்லக்கூடாதா என்று விளாசுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பேசினாலும் இந்த வாரம் வெளியே போகப் போறது நீங்கதான் கன்னுக்குட்டி என்று பேசி வருகின்றனர்.

எவிக்ஷனிலிருந்து தப்ப முடியாது
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன பண்ணினாலும் இந்தவாரம் இந்த ஆணி எவிக்சனிலிருந்து தப்பிக்க முடியாது என்று அனிதாவின் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பேசியதே கிடையாது..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி இதுவரை யாரையும் மரியாதை குறைவாக பேசியது கிடையாது!.. மாற்றானையும் போற்றும் மாண்பு!.. ஆரி அர்ச்சுனன் என்று கூறி அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கப் அடிக்க போறான்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படி இருந்தாலும் ஆஜித் பையன் தான் கப் அடிக்க போறான் பார்த்துட்டே இருங்க என்று கூறியுள்ளார்.

கோர்வையா பேச வராது..
செம ஃபுளோ.. அனிதா சம்பத்.. எனக்குலாம் இந்த அளவுக்கு கோர்வையா பேச வராது.. பாலாஜியால கூட வாய் திறக்க முடியாத அளவுக்கு வேகமா இருக்கு.. என்று பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

அனிதா இரிட்டேட்டிங்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா இப்போதெல்லாம் இரிட்டேட் பண்ணுகிறார்.. உங்களில் எத்தனை பேருக்கு அப்படி தோன்றுகிறது.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நீயும் அதே மாதிரிதான்
ஆமா டுபாக்கூர் பாலா பத்தி எங்களுக்கு தெரியும். ஆனா நீயும் அதே மாறிதான் எந்த டிஃப்ரெண்டும் இல்ல. மத்தவங்கள உங்க குறைய பத்தி சொல்லவே விடாம சீன் போட்டு வாய அடைக்குறது உனக்கும் பயில்வானுக்கும் கைவந்த கலை என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இறுதிப்போட்டிக்கு தயார் செய்தபோது
ஆஜித் அக்கடா என்று தூங்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், இந்த நெட்டிசன், தம்பி அஜீத் தன் முழு திறமை வெளிப்படுத்தி 75 நாட்கள் கடந்து இறுதிப்போட்டிக்கு தன்னை தயார் செய்த போது எடுத்த புகைப்படம்.. என்று பங்கம் செய்துள்ளார்.

ஓவர் கான்பிடன்ஸா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா பேச்சிலும், செயல்பாட்டிலும் ஒரு திமிரு இருக்குற மாதிரி இப்பொல்லாம் தெளிவா தெரியுதே, இதுக்கு பெயர், நான் பேசுவது சரி என்ற கான்ஃபிடன்ஸா? இல்லைனா, நா என்ன பேசினாலும் சரி என்ற ஓவர் கான்பிடன்ஸா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











