நடிப்புக்கே நாட்டியம் சொல்லி தர்றாங்களே.. அர்ச்சனாவோட உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பிச்சுருக்கு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிஷாவை பழிக்கு பழி வாங்கும் அர்ச்சனாவை விளாசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் நேற்று ரோபோவாக இருந்த அர்ச்சனா டீம் இன்று மனிதர்களாகியுள்ளனர்.
இதில் நேற்று தன்னை பிரேக் செய்த நிஷாவை பழிக்குபழி வாங்குகிறார் அர்ச்சனா. நேத்து நீ பேசினதெல்லாம் நியாயமா என கேட்டு அவரை வறுத்தெடுக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்போதுதான் அர்ச்சனாவின் உண்மை முகம் தெரிய வருவதாக தெரிவித்துள்ளனர்.
நோகடிக்கிறீங்களே
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரோபோ டாஸ்க்னு சொல்லி ரொம்ப நேரமா நோகடிக்கிறீங்களே பெரியபாசு! என்று நொந்து போயுள்ளார் இந்த நெட்டிசன்.
நிஷா ரொம்ப பாவம்மா
இரண்டாவது புரமோவில் நிஷாவை அர்ச்சனா வறுத்தெடுப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா அர்ச்சனா.. நிஷா ரொம்ப பாவம்மா என்று கூறியுள்ளார்.
நடிப்புக்கே நாட்டியம்
மற்றொரு நெட்டிசனான இவர் நடிப்புக்கே நாட்டியம் சொல்லி தரும் டம்மி அன்பு அர்ச்சனா.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
உண்மை முகம்
அர்ச்சனாவோட உண்மையான முகம் வெளிய வருது போல. என்னமோ எல்லாம் நன்மைக்கே எல்லாரும் இனிமேல் வெளிய தெரிவாங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
மூடிக்கிட்டு கிளம்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா நீயே ஒரு உலகமகா நடிகை நீயும் நடிகைதான் உன் குரூப்பும் நடிகை நடிகர்கள்தான்.. மூடிக்கிட்டு கிளம்பு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
நடிப்பு அபாரம்
புரமோ பார்த்த இந்த நெட்டிசன் அப்பாவை பற்றி பேசும்போது ரொம்ப அழகாக நார்மலாக பேசிய அர்ச்சனா ரோபோவின் இதயத்தை கழட்டி ரோபோ செயல் இழந்தது என்று அறிவித்தவுடன் வந்ததே பார் ஒரு கோபம்.. அப்பப்பா என்ன ஒரு பெர்பார்மன்சு அர்ச்சனாவின் நடிப்பு அபாரம்... நிஷா சூப்பர் என கூறியுள்ளார்.
ஓவரா நடிக்கிறாங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இந்த டாஸ்க்கில் அர்ச்சனா தான் தோத்துவிட்டோம் என்றதும்.. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரொம்ப ஓவரா நடிக்கிறாங்க.. அப்பட்டமாகவே தெரிகிறது. லவ் பெட் என்றும் பாராமல் நிஷா உண்மையில் சூப்பரா விளையாடினார் என கூறியுள்ளார்.
அப்பா நியாபகம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவுக்கு அப்பாவை விட டாஸ்க்குதான் பெருசு, டாஸ்கில் பேச வாய்ப்பிருந்தும் ஒரு வார்த்தை தடுக்கவில்லை, ஸ்டாரை எடுக்கும் போது எடுக்ககூடாதுனு விளக்கம் கொடுத்த வாய், இதைப்பற்றி ஒரு வார்த்தை நிஷாவிடம் சொல்லவில்லை, டாஸ்க் முடிந்து பிறகு ஸ்டார் பஞ்சாயத்து முடிந்து பிறகுதான் அப்பா ஞாபகம் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











