அந்த கடுப்பு.. கதறும் பாலாஜி.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு.. குதூகலமாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் பாலாஜி கதறுவதை பார்த்து குதூகலமாகியுள்ளனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி தொடக்கம் முதலே ரொம்பவே திமிராய் நடந்து வருகிறார். மற்றவர்களின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிலும் டபுள் கேம் ஆடி வருகிறார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் அவர் மீது செம காண்டில் உள்ளனர்.

கடுப்பான பாலாஜி

கடுப்பான பாலாஜி

இந்நிலையில் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சொத்து பத்திரத்தை திருட பிளான் போட்டார் பாலாஜி. ஆனால் அவருக்கு முன்னதாகவே சோம் யாருக்கும் தெரியாமல் பத்திரத்தை திருடி விட்டார். இதனால் கடுப்பாகி விட்டார் பாலாஜி. இன்றைய முதல் ப்ரோமோவில் எவண்டா பத்திரத்தை எடுத்தது என பயங்கரமாக கத்துகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீயும் உன் ப்ரோமோவும்..

நீயும் உன் ப்ரோமோவும்..

ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு!... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய் உன் ப்ரோமோ இருக்கு!... 9மணி ப்ரோமோவையே ஒழுங்கா போட மாட்டென்குறே!.. போய்யா நீயும் உன் ப்ரோமோவும்!.. இனி பாம்தான் வைக்கனும் என கூறியுள்ளார்.

அசிங்கமாக பேசுகிறார்

அசிங்கமாக பேசுகிறார்

மற்றொரு நெட்டிசனான இவர், சோமு வேற லெவல் கேம் ஃப்ளான் போல.. இருந்தாலும் இந்த வாரம் பிக் பாஸ் பாவம்.. பாலாஜி அசிங்கமாக பேச ஆரம்பித்து விட்டார்!!!! என கூறியுள்ளார்.

என்னென்ன நடக்கபோகுதோ?

என்னென்ன நடக்கபோகுதோ?

இன்றைய முதல் ப்ரோமோவில் பாலாஜி கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் கத்த ஆரம்பிச்சிட்டாரு இனி என்னென்ன நடக்கபோகுதோ? என கூறியுள்ளார்.

இது டாஸ்க்குடா..

இது டாஸ்க்குடா..

ப்ரோமோவில் சோம் சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அந்த சிரிப்பு தான் வேணும் எங்களுக்கு! கொஞ்சமாவது எண்டெர்டைன்மென்ட்டா கொண்டுபோங்க! போட்ட செட்டுக்காவுது மரியாத கொடுங்க! இது டாஸ்க்குடா. நிஜமா சொத்து இல்லடா! என அட்வைஸ் பண்ணியுள்ளார் இந்த நெட்டிசன்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ப்ரோமோவில் பாலாஜி கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப நல்லா காண்டேத்தி விட்றீங்கடா பாலாவ, ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு பார்க்கவே என பதிவிட்டுள்ளார்.

அந்த கடுப்புதானே..

அந்த கடுப்புதானே..

பத்திரம் காணாமல் போனதால் பாலாஜி கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், எவன்டா அது நான் நேத்து அவ்ளோ பில்டப் கொடுத்தேன் ஷிவானிக்கிட்டேயும் கேபிக்கிட்டேயும் எவன்டா அது என்ன மீறி எடுத்தது! அந்த கடுப்புதானே சூப்பர் ஹீரோ தெரியுது! என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனை உனக்குதான்

பிரச்சனை உனக்குதான்

அடேய் பாலாஜி உனக்கு கத்த மட்டும் தான் தெரியும் போல.. சோம் எப்பவும் கூல்.. அடேய் பாலாஜி சோம்கிட்ட பாத்து பேசு அப்பறம் பிரச்சனை உனக்கு தான்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்ல அம்மா கொடுக்க மாட்டீங்களா..

நல்ல அம்மா கொடுக்க மாட்டீங்களா..

நேற்றைய டாஸ்க்கில் பாலாஜிக்கு அம்மாவாக சனம் ஷெட்டியை அறிவித்தார் பிக்பாஸ். அதை பார்த்த இந்த நெட்டிசன், டாஸ்க்லயாவது பாலாஜிக்கு ஒரு நல்ல அம்மா கொடுக்க மாட்டீங்களா பிக்பாஸ் என கேட்டுளளார்.

ஸ்டார்ட்டிங் பாயிண்ட்

ஸ்டார்ட்டிங் பாயிண்ட்

பாலாஜி முருகதாஸ் கதறும் தருணம். சோமசேகர் முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு.. கேபிக்கும் பாலாஜிக்கும் சண்டைக்கு ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X