சோம் ரம்யா காதல் கதை இனிதே ஆரம்பம்.. பிக்பாஸின் பிளானை தோலுரிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யாவையும் சோமுவையும் கோர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சயில் ஏற்கனவே பாலாஜிக்கும் ஷிவானிக்கும் கோர்த்துவிட்டுள்ளார்கள்.
ஷிவானி பாலாஜியுடன் நெருக்கமாக பழகுவது எச்சிலை சாப்பிடுவது என ரொமான்ஸ் செய்து வருகிறார்.

புதிய ட்ராக்
ஷிவானியை தான் காதலிக்கவில்லை என்று பாலாஜி கூறினாலும் அவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கின் மூலம் புதிய காதல் ட்ராக் ஒன்றை பற்ற வைத்துள்ளார் பிக்பாஸ்.

சோம் ரம்யா ஜோடி
அதாவது பாட்டி சொல்லை தாட்டாதே என்ற டாஸ்க்கை கொடுத்துள்ள பிக்பாஸ், அர்ச்சனாவை பாட்டியாக்கியுள்ளார். மேலும் அவருக்கு இளைய மகனாக சோமையும் அவருக்கு மனைவியாக ரம்யாவையும் ஜோடி சேர்த்துள்ளார்.

இப்படி ஒரு டாஸ்க்
ஏற்கனவே ரம்யா பாண்டியனுக்கு சோம் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது. இதேபோல் சோமுக்கும் ரம்யா பாண்டியன் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது. இந்நிலையில் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் காதலை ஊக்குவிக்கும் வகையில் பிக்பாஸ் இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

புரமோ லேட்டு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் கெட்டபாசு!... வரவர நீயும் மிக்சரை புல்லா சாப்பிட ஆரம்பிச்ட்டே!... இந்த புரமோ லேட்டு! என புரமோ தாமதமானதை குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள், பிக் வீட்டில் இந்த வாரம் குரளி வித்தை நடத்தறாங்க போல.. என குறிப்பிட்டு ரசிகர்கள் ரியாக்ஷன் என இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஒன் சைட் லவ்வர்
நல்ல காரியம் கேப்ரியல்லா அம்மா & அப்பா, சோமும் ரம்யாவும்.. இவங்களக்கூட ரசிக்கலாம்.. சோம் சினிமாவுல வர ஒன் சைட் லவ்வர் மாதிரியே சுத்துறார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மூனு பேரும் ஒரே டீம்
எனக்கு புடிச்ச மூனு பேரும் ஒரே டீம்.. என சோம், ரம்யா, கேபி இருக்கும் ஷாட்டை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

பொழுத ஓட்டனும்
மற்றொரு நெட்டிசனான இவர், யோவ் மிக்சர்பாசு!... தயவுசெய்து மூனு மணிக்கு மூன்றாவது புரோமாவை போடுயா!... மறந்துறாதய்யா! எங்களுக்கும் வேற வேலை இல்லை!...இந்த புரோமாவை வெச்சுதான் பொழுத ஓட்டனும்! என கூறியுள்ளார்.

டாஸ்க்க யூஸ் பண்ணி
சோம் ரம்யா காதல் கதை இனிதே ஆரம்பம்.. சோம் அவனோட மனசுல இருந்தது எல்லாம் இந்த டாஸ்க் யூஸ் பண்ணி ரம்யாகிட்ட சொல்ல போறான் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டாஸ்க் ரெடி பண்ணிடுவாரு
பிக் பாஸ் வீட்ல ஒரு பொண்ணு புடிச்சிருந்தா, அந்த பொண்ணு கிட்ட சொல்றதுக்கு பயமா இருந்தா பிக் பாஸ் கிட்ட சொன்னா போதும். ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரி பிக் பாஸ் டாஸ்க் ரெடி பண்ணிடுவாரு என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











