இதெல்லாம் ஒரு புரமோ.. பாவம் பிக்பாஸ்.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு.. புரமோவால் நொந்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமாவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு புரமோவா என கேட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஃபன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிக்பஸ் வீடு எஃப்எம் ஸ்டேஷனாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்த புரமோவில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் சுவாரசியமாக இல்லை. அதனை கிண்டலடித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது புரமோவா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இதெல்லாம் ஒரு புரமோ அப்படிதான.. என கேட்டு கலாய்த்துள்ளார்.
அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு
பிக்பாஸின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவம் பிக் பாஸ் என்ன டாஸ்க் கொடுக்குறதுன்னு அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு போல.. என கூறியுள்ளார்.
நீ சரிப்பட மாட்ட..
என்னடா எல்லாம் உளருதுகள்.. வர வர புரமோ புட்டு கிட்டு போகுது... நீங்க சரிப்பட்டு வர மாதிரி தெரியலை.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஷிவானி மோசம்
புரமோவில் ரம்யா மற்றும் ஷிவானியின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா க்யூட்டாக உள்ளார். ஆனால் ஷிவானியின் பிஹேவியரும் டிரெஸிங்கும்தான் மோசமாகிறது என பதிவிட்டுள்ளார்.
இதான் ரெடி பண்ணீங்களா?
பிக்பாஸ் புரமோவில் எஃப் எம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், கதவை மூடி வச்சிகிட்டு இந்த டாஸ்க்குக்குதான் ரெடி பண்ணிங்களா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
பேரு டேமேஜ் ஆயிடும்
ஷிவானி நீ பாலாஜி கூட சேர்ந்து லவ் ட்ராக் எடுத்த கடைசியில உன் பேரு டேமேஜ் ஆகிதான் வெளியே போவ என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











