ஓகே.. ஏதோ நடக்கப்போகுது.. அர்ச்சனாவை வைத்து கொளுத்திப்போட்ட பிக்பாஸ்.. பீதியில் ஃபேன்ஸ்!
சென்னை: அர்ச்சனாவை வைத்து வீட்டுக்குள் பிக்பாஸ் கொளுத்திப் போட்டதை பார்த்த நெட்டிசன்கள் என்னவோ நடக்கப்போகுது என்று ஆர்வமாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ள அர்ச்சனா, வந்த கையோடு மொத்த பேரையும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
போட்டியாளர்களுக்கு பட்டத்தை கழுத்தில் மாட்டி விட்டு வேற லெவலில் இறங்கியிருக்கிறார் அர்ச்சனா. அதனை பார்த்த நெட்டிசன்கள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என பீதியடைந்துள்ளனர்.

பலி கடாக்கள்
அர்ச்சனா பட்டத்தை மாட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், அங்க கழுத்துல மாட்டறது இதை ஞாபகப்படுத்துகிறது என பலி கடாக்களின் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

என்ன நடக்க போகுதோ
மற்றொரு நெட்டிசனான இவர், பிக்பாஸ் கொளுத்தி போட ஆரம்பிச்சுட்டான்.. ரம்யா பாண்டியன் சவாலான போட்டியாளர். பாலாஜி முருகதாஸ் சிம்பிளி வேஸ்ட். ஆஜித் மற்றும் கேப்ரியல்லா காணவில்லை. ஷிவானி நாராயணன் அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட். சனம் ஷெட்டி நமத்து போன பாட்டாசு (ஆனா இப்ப இல்லை ) ஓகே எதோ நடக்க போகுது என பதிவிட்டுள்ளார்.

முடிவு பண்ணிட்டாரு
கழுத்துல மாலை போல மாட்டி பலி கடா ஆக்க அர்ச்சனா மூலம் முடிவு பண்ணிடாரு பெரியபாசு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன ரியாக்ஷன் இது
மற்றொரு நெட்டிசனான இவர், ஏம்மா என்னமா இதெல்லாம்,
நமத்து போன பட்டாசுக்கு ரியாக்சன் தர சொன்னா, இது என்னடானா வேற ஏதோ ஒரு ஜந்து மாதிரி ரியாக்சன் தருதேமா.. என பதிவிட்டுள்ளார்.

ஒழுங்கா விளையாடுது
என்ன பொறுத்தவரைக்கும் தலைவன் சுரேஷ் பயப்புள்ள தான் விளையாட்ட ஒழுங்கா விளையாடுது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

உன் வேலைய பாரு
ஷிவானி அர்ச்சனா கொடுத்த பட்டத்தை உடனடியாக கழட்டியதை தொடர்ந்து ஷிவானியின் மைண்ட் வாய்ஸ் என நீ ஒன்றும் எனக்கு இது கொடுக்க தேவையில்ல வந்த வேலைய மட்டும் பாத்துட்டு போ என கூறுவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அழகு பார்க்க சொன்னது?
அர்ச்சனா செய்த இந்த வேலையை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா இப்படி மாட்டிவிட்டு அழகு பார்க்க சொன்னது யாருப்பா அது? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











