அர்ச்சனாவை காப்பாற்ற பிக்பாஸ் போட்ட நரித் திட்டமா கோழிப்பண்ணை டாஸ்க்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும் மறு பாதி ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் உள்ளனர். இதில் வெற்றி பெறும் நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிளான்
இதனை பார்த்த நெட்டிசன்கள் , நாமினேஷனில் உள்ள அர்ச்சனாவை காப்பாற்ற பிக்பாஸ் பிளான் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர். டாஸ்க் என்றால் அர்ச்சனா புலியாகிவிடுவார். இதுவரை நடந்த டாஸ்க்களில் பெரும்பாலானவற்றில் அர்ச்சனா மற்றும் அவரது அணியே வெற்றி பெற்றுள்ளதால் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நரித்திட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவை காப்பாற்ற பிக்பாஸ் போட்ட நரி திட்டம்தான்னு எனக்கு தோனுது! என்று கூறியுள்ளார்.

வாய்ப்பு இல்ல ராஜா
நெட்டிசனின் அந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள இந்த நெட்டிசன், நான் அப்படி நினைக்கல... டாஸ்க் போற போக்குல எல்லாமே மாறிவிடும்... வாய்ப்பு இல்ல ராஜா என கலாய்த்துள்ளார்.

ஒத்திகையா இருக்கலாம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த கலகத்திற்கு இந்த டாஸ்க்கு ஒரு ஒத்திகையா கூட இருக்கலாம்! என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் அழுவாரு..
மற்றொரு நெட்டிசனான இவர் நேற்றைக்கு பிக்பாஸ் கேட்டதும் ரியோவும் ஷிவானியும் அழுக ஆரம்பிச்சுட்டாங்க, இன்னைக்கு அனிதா பேச ஆரம்பிச்சதும் பிக் பாஸ் அழுக ஆரம்பிச்சிருவாரு.. என கூறியுள்ளார்.

கார்ட்டூன் ஞாபகம்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த டாஸ்க் பார்க்கும்போது... இந்த கார்ட்டூன் தான் ஞாபகம் வருது.. என கார்ட்டூனை ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.

நல்லா இருக்கும்..
அந்த ஸ்பெஷல் பவர் நாமினேஷனில் இருந்து தன்னையோ அல்லது வேறு யாரையாவதோ சேவ் பண்ணுறதா இருந்தா நல்லா இருக்கும்... என பதிவிட்டுள்ளார்.

சம்பவம் இருக்கு போல
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்பாடா பிஸிக்கல் டாஸ்க் வச்சிட்டாங்க.. சம்பவம் ஒன்னு இருக்கும் போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்த வாரம் இவர்தான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டாஸ்க் பயங்கரமா இருக்கும் போலயே.. அப்ப சம்பவம் நிறைய இருக்கு... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











