ரியோ பாத்துட்டான்னு சோமுவே சொல்றான் இன்னும் என்னத்த முட்டு குடுக்குறீங்க.. காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்சியில் தீபாவளி ஸ்பெஷலாக இடம்பெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கை பாலாஜி தன் இஷ்டத்துக்கு சொதப்பி விளையாடினார்.
இதனால் அந்த டாஸ்க்கே பிளாப் ஆகிவிட்டது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின்ன பாயிண்ட்ஸும் காலியாகிவிட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் டாஸ்க்கில் திருடன் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்த உண்மையை கூறியுள்ளார் பிக்பாஸ். மேலும் சோம் திருடி காட்சியையும் குறும்படமாக போட்டுக் காட்டியுள்ளார் பிக்பாஸ். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நினைச்சா..
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவரு நினைச்சா அப்படியே கேமையே மாத்திடுவாராம்!.. பயில்வான்!...ஒன்னு புரிஞ்சுக்கோ பிக்பாஸ் நினைச்சா எப்படி வேண்டுமானாலும் மாத்துவாரு! என பாலாஜியை விளாசியுள்ளார்.

இவங்க மூணு பேருதான்
பிக்பாஸின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இங்க சில பேருக்கு பாலாஜி முருகதாஸ் மாதிரி கேனத்தனமான பண்ணத்தான் புடிக்கும்.. எனக்கு சோம், ரம்யா, கேபி பண்ணதுதான் புடிச்சது.. அடேய் பாலாஜி சப்போர்ட்டர்ஸ் நீங்க என்னதான் கதை விட்டாலும் இந்த டாஸ்க் ஜெயிச்சது இவங்க மூணு பேருதான் என்று கூறியுள்ளார்.

அப்படிதானே ஸ்க்ரீப்ட்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கி சண்டையோ அழுகையோ இல்லாம எல்லாரும் சந்தோசமா இருக்கிற மாதிரி தானே ஸ்கிரிப்ட்.. என கேட்டுள்ளார்.

மொத்தமா போச்சா..
மற்றொரு நெட்டிசனான இவர், போனவாரம் போன 200 பாயிண்டையும் இந்த வாரம் சேர்த்து கொடுக்கிறேன்னு பாலா சொன்னான், ஆனா இப்போ மொத்தமா பிச்சுட்டு போச்சா.. என நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

வழியுது கொஞ்சம் துடைச்சுக்கோ
மற்றொரு நெட்டிசனான இவர், யோவ் பயில்வான் உனக்கு முதல் புரோமாவிலிருந்தே முகத்துல வெளக்கெண்ணெய் வழியுது கொஞ்சம் துடைச்சுக்கோ! என பாலாஜி முருகதாஸை விளாசியுள்ளார்.

என்ன முட்டு கொடுக்றீங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ பாத்துட்டான்னு சோமுவே சொல்றான் இன்னும் என்னத்தை முட்டு கொடுக்குறீங்க என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பேரன் சொல்ல தட்டாதேனு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி தான் சந்தோசமா முடிஞ்சிருக்கனும் அதுக்குள்ள குழப்பி!
பாட்டிய கடுப்பேத்தி! பேரன் சொல்ல தட்டாதேனு டாஸ்க்க மாத்தி! இதுல இரண்டு பேரு இஞ்சி நிறைய தின்னுட்டு முழிக்கிறாங்க வேற என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

கண்ணுக்கு தெரியல போல
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்ப சோம் எடுத்தது யாருக்கும் தெரியாது அப்படி தான நிஷா பாவம் பக்கத்தில இருந்தும் சோம் எடுத்து வைக்குறது கண்ணுக்கு தெரியல போல.. என கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











