நல்லா கொளுத்தி போடுறீங்க சிபி.. பேக்கேஜ்ஜ இறக்கி வையுங்க.. அட்வைஸ் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிபிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் நேற்று அக்ஷராவுடன் நடந்த மோதல் குறித்து நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சியிடம் விலாவரியாக பேசுகிறார் சிபி.
அப்போது பால் கறக்கும் டாஸ்க்கின் போது நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயமா என்பதை போல் பேசுகிறார்.

நல்லா கொடுத்தி போடுறீங்க
அப்போது நிரூப் தனது தரப்பு நியாயத்தை கூறுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பழைய பிரச்சனையை எல்லாம் பேசி எதற்காக சிபி இப்படி கொளுத்தி போடுகிறார் என விளாசி வருகின்றனர். இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா கொளுத்தி போடுறீங்க சிபி... ஆனால் நிரூப் ரொம்ப ஸ்மார்ட்... நான் என் பிரச்சனையை க்ளாரிஃபை பண்ணிட்டேன், உங்க பஞ்சாயத்து எனக்கு வேண்டாம் என்று நிரூப் கூறுவதாக பதிவிட்டுள்ளார்.

ஆக்ரோஷம் தேவை இல்லை
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிபியோட பாயிண்ட் கரெக்ட் தான். அதே சமயம் சில விஷயம் நமக்கே தெரியணும் இதை பண்ணலாமா வேண்டாமான்னு அதே யோசிக்காம பண்ணது தான் தப்பு. அதைதான் நிரூப் பண்ணி இருக்கார். என்னோட கருத்து இந்த டாஸ்க்ல பெண்கள் கிட்ட இவ்வளவு ஆக்ரோஷம் தேவை இல்லை.. அது உனக்கு ஏன் புரியல சிபி என கேட்டு பதிவிட்டுள்ளார்.

ஸ்டாண்ட் பத்திலாம் பேசவே கூடாது
மற்றொரு நெட்டிசனான இவர் சிபி ரொம்ப மோசம்.. நிரூப் ஒத்துக்கலாம்.. ஆனால் நீங்க பேசவே கூடாது... புராப்பர்ட்டிய தூக்கி எறிஞ்சு, கேவலமா விளையாடிட்டு இப்போ டபுள் ஸ்டாண்ட் பத்திலாம் பேசவே கூடாது.. அதுவும் நீங்கள் அன்று நீங்கள் அதிகமாக பேசினீர்கள்.. தாமரையின் அடக்கம் குறித்து பேசிவிட்டு... என்னவோ பண்ணுங்க என பதிவிட்டுள்ளார்.

ஆண்டவர் விடமாட்டாரு
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ ஒன்னும் கவலை படாத சிபி, சனிக்கிழமை உன்னையும் நிரூப்பையும் ஒரு பொல பொலக்காம விட மாட்டாரு நம்ம ஆண்டவர்... அதுக்கு அப்புறம் பாரு.. அக்ஷரா எப்படி உங்களை அழுது காலி பண்ணுறாங்கன்னு.. என்ன முட்டுக் கொடுத்தாலும் இதான் நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

திருந்த மாட்டார் போல
இன்றைய புரமோவில் சிபி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சிபி திருந்த மாட்டார் போலயே... அக்ஷரா மேல கோபமே இல்லை என்று கூறியது பெரிய காமெடி என பதிவிட்டுள்ளார்.

எல்லா வாரம் ஓட்டுறாங்களே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்ஷராவும் சிபியும் பேக்கேஜ் வைத்துள்ளார்கள். இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாருமே பெரும்பாலும் பேக்கேஜ் கேரி பண்றாங்க.. இது எப்போது பேக் ஃபயர் ஆகும் என்று தெரியாது.. நல்லது அல்ல... அடுத்த வாரம் நாமினேட் பண்ணதும் விட்டுட்டு போயிடணும்.. ஒரே காரணத்தை வச்சு எல்லா வாரம் ஓட்டுறாங்களே.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











