சிவசாமிக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்.. தனுஷ் மரண லெவல் ஆக்டிங்.. அசுரன் மிஸ் பண்ணிடாதீங்க மக்கா!
Recommended Video
சென்னை: அசுரன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நான்காவது படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அசுரன் படத்தில் இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறார் தனுஷ். அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருக்கிறார் தனுஷ். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே அசுரன் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விமர்சனம்
தனுஷின் நடிப்பை பாராட்டி டிவிட்டரில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். படத்தில் நடிகர் தனுஷ், அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் படம் தொடர்பாக சில நெகட்டிவ் கருத்துகளும் எழுந்துள்ளன.
எப்போ நடிக்கப்போறாரோ?
விஜயண்ணா என்னைக்கு இந்த மாதிரி எல்லாம் நடிக்கப் போறாரோ என்று கேட்கிறார் இவர்.
புரிய வைக்கும்
60களில் நடந்த சமுதாய போராட்டம் இப்போது உள்ள இளைஞர்களுக்கு அசுரன் தெளிவாக புரிய வைக்கும்.. என்கிறார் இவர்.
நிச்சயம் தேசிய விருது
தனுஷுக்காக இந்த படம் நிச்சயம் தேசிய விருது வாங்கும். என்ன நடிகர்யா தனுஷ், நிஜமாவே நடிப்புல அசுரன் என தெரிவித்து இருக்கிறார் இந்த நெட்டிசன்.
மரண லெவல் ஆக்டிங்
மரண லெவல் ஆக்டிங்.. டைலாக் டெலிவெரி.. இதான் உங்க வழி இத மாத்திக்காதிங்க.... குடும்பத்தோட பாக்குற மாதிரி படம் நடிக்க நிறைய பேரு இருக்காங்க....ஆனா கதைக்கு ஏத்த மாதிரி நடிக்க நடிகனா நீங்க மட்டும் தான் இருக்கிங்க.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்
பிரியாணி சாப்பிட்டிருக்கலாம்
அசுரன் படம் அந்த அளவுக்குலாம் ஒன்னும் இல்ல.. தனுஷ் ஓவர் ஆக்ட்டிங்.. நிறைய சீன்ஸ் காமெடியா இருந்துச்சு.. ஜிவி பிரகாஷ் விஸ்வாசம் பிஜிஎம சுட்டு போட்டிருக்காரு.. இந்த காசுக்கு பேசாம கோழி பிரியாணி சாப்பிட்டிருக்கலாம் என்று கூறுகிறார் இவர்.
வாழ்ந்திருக்காருய்யா
சிவசாமிக்கு அவார்டு ஒன்னு எடுத்து வைங்களே.. மனுஷன் வாழ்ந்திருக்காருய்யா..
மிஸ் பண்ணிடாதீங்க
நம்மகிட்ட இருந்து நிலத்தை எடுக்கலாம், காசை திருடலாம்,
ஆனா படிப்பை யாரும் திருட முடியாது. நல்லா படிக்கனும். அதுதான் நம்மை முன்னேற்றும். அசுரன் மிஸ் பண்ணிடாதீங்க மக்கா.
ஜெய்ச்சுட்டு இருக்கான்
எல்லா நடிகரும் ஃபேமிலி ஆடியன்ஸ், கலெக்ஷன்னு போயிட்ருக்கும்போது... ஒருத்தன் மட்டும் தரமனா கதை.. அவார்ட்ஸ்னு போய் ஜெய்ச்சிட்டு இருக்கான்...
நேஷனல் அவார்டு வெல்லும்
அசுரன் தனுஷ் அவர்களின் வெறித்தனமான நடிப்பும், வெற்றிமாறனின் ஆழமான ஸ்கிரீன்பிளேவும் நிச்சயமாக நேஷனல் அவார்டு வெல்லும்.. தனுஷ்.. தலைவருடன் அந்த அரசியல் படம் வந்தால் மிக நன்றாக இருக்கும்..


Click it and Unblock the Notifications











