பாவம்.. டிஜிட்டல் அன்னை.. வெளியே போறோம்னு தெரியாமலேயே பின்னி பெடல் எடுத்துருக்காங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவிலும் கமல் அர்ச்சனாவை மரண கலாய் கலாய்த்தார். தனது போட்டோ இருந்த முட்டையை சோம் தூக்கிப்போட்டதால் கடுப்பான அர்ச்சனா என் போட்டோவை எப்படி தூக்கி போடலாம் என ஆவேசமாகி சண்டை போட்டார்.
Recommended Video

அர்ச்சனாவின் அந்த பிஹேவிங் பச்சை ஓவர் ஆக்டிங் என்று தெரிந்தது. அன்பு அன்பு என்று சொல்லி விட்டு தனது போட்டோவை தூக்கிப் போட்டதற்காக சுயரூபத்தை காட்டினார் என பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இரண்டாவது புரமோ
இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அதுகுறித்து பேசினார் கமல். அப்போது பதிலுக்கு பதில் கவுண்டர் கொடுத்து பட்டையை கிளப்பியுள்ளார் அர்ச்சனா. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் வச்சு செய்துள்ளனர்.
கொழம்பு வச்சுட்டாங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் கண்டெஸ்டெண்டுகளா, பாசமான கோழி, அன்பான கோழி, அடக்கமான கோழின்னு சனிக்கிழமை கலர் காலரா அவார்டு கொடுத்திங்க. ஆனா மக்கள் அதே கோழியை ஞாயிற்றுக் கிழமை அடிச்சு கொழம்பு வச்சுட்டாங்க. பாத்து சூதானமா நடந்துக்குங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
பின்னி பெடல் எடுத்திருக்கு
புரமோவில் அர்ச்சனா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், டிஜிட்டல் அன்னை வந்து வெளியில் போக போறேன்னு தெரியாமலே பின்னி பெடல் எடுத்து இருக்கு என்று கலாய்த்துள்ளார்.
முக்காடு போட்டு படிங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடாவடி மம்மி!... நீங்க போட்ட அன்பு வேசம் கலைஞ்சு போயி, ரொம்ப நாள் ஆச்சு.. மறக்காம நாங்க போட்ட காமெண்டு எல்லாம் முக்காடு போட்டுகிட்டு படிங்க என்று கூறியுள்ளார்.
அன்பு வெளியாகிட்டுதாமே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் குருநாதா அன்பு வெளியாகிட்டுதாமே.. இந்த டைம் வீட்ல இருந்து கமெண்ட் படிக்கும் போல என்று துவம்சம் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
துக்கிட்டு கிளம்புங்க..
அர்ச்சனா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், போதும்.. தாயி.. போதும்! உங்க அகங்கார அன்பை தூக்கிக்கிட்டு கிளம்புங்க.. என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய தவறு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி கேரக்டர் கூட இன்ட்ரஸ்டிங் இல்லை. வகுப்பில் எலலோரும் முட்டாளா இருக்கும் போது சுமாரா படிக்கிறவன் அறிவாளி என்பது போல் இந்த சீசனில் ஆரியின் நிலை. தாத்தாவை வெளியேற்றியது தான் இந்த சீசனின் மிகபெரிய தவறு என கூறியுள்ளார்.
ஏன் இந்த தயக்கம்?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் இன்னும் நீங்க அர்ச்சனாவுக்கு ஏத்தவிதத்தில் வாழபழம் மாதிரி பேசிட்டு இருக்கிங்க..அதனால தான் அவங்க இன்னும் மாறாம இருக்காங்க ஏன் அவங்க கிட்ட இந்த தயக்கம்? குறும்படம் போட்டு கனிரென்று தவறை சுட்டி காட்டினால் தான் அவர்கள் தவறை உணருவார்கள்! தனித்திருனு கருத்து சொன்ன மாறிடுவாங்களா? என கமலை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











