தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள்.. ரஞ்சித் சொன்னது கடைசியில திரௌபதிக்கே முடிஞ்சுடுச்சே!
சென்னை: இயக்குநர் ரஞ்சித் பேசியது கடைசியில் திரௌபதி படத்துக்கு நடந்துவிட்டது என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு ரிஷி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்துள்ளார்.
நாடகக் காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரௌபதி காட்சியிடப்படும் தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகி வருகின்றன.

படக்குழு மகிழ்ச்சி
படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களிலேயே 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து இருக்கிறது. இதனால் திரௌபதி திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு வசூலும் வரவேற்பும் குவிவதால் படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நறுவி பட விழா
இந்நிலையில் நறுவி பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, அண்மையில் சென்னையில் "நறுவி" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

மாறுவார்கள்
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்த படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

கொண்டாடுவார்கள்
இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றி அடைய வேண்டும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள் என்று கூறினார்.

கலாய்த்து வசனங்கள்
இயக்குநர் ரஞ்சித் கூறியது திரௌபதி படத்திற்கே நடந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரின் படங்களுக்கு எதிராக திரௌபதி படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குநர் ரஞ்சித்தையும் கலாய்த்து வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











