வரவங்க யாரும் ஆரிய பத்தி பேசாம போறது இல்ல.. அந்த ரெண்டு பேருக்கும் எரியும்.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஆரியை கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கேபியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது தெரியவந்தது.
ஹவுஸ்மேட்ஸ்களை விசாரித்த கேபியின் அம்மா ஆரியை நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருப்பதாக கூறினார். தொடர்ந்து ஆரியை அவர் புகழ, யூ டூ புரூட்டோஸ் என்று அம்மாவிடம் கேட்கிறார் கேபி.

வயிறு எரியுமே
இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியை புகழ்ந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருபவர்கள் எல்லோரும் ஆரியை புகழ்வதால் ரியோ, ரம்யா மற்றும் பாலாஜிக்கு வயிறு எரியுமே என்றும் கூறி வருகின்றனர்.

அம்பியே பிடிக்கும்
புரமொவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் ஆரியை தான் வாழ்த்துறாங்க வந்தவர்கள் அனைவருமே.. பிக் பாஸ் வீட்டில் நேர்மை மறுபெயர் அம்பி என்றால்.. பிக் பாஸ் வீட்டில் வெளியே இருப்பவர்களுக்கு அம்பியே பிடிக்கும்... என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

போட்டியாளரை மிஞ்சி
போட்டியாளர்களின் குடும்பத்தார் உள்ளே வரும்போது அந்த போட்டியாளரை மிஞ்சி மாஸ் பண்ணிட்டு போறாங்கப்பா!... ஷிவானி அம்மா, ரம்மி தம்பி, சோமுவின் புரோ! என இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினரை புகழ்ந்துள்ளார்.

ஆவலாய் எதிர்நோக்கி
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணன் ஆரியின் பேமிலி வருகையை ஆவலாய் எதிர்நோக்கும் நாங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.

பேசாம போறது இல்ல
புரமோவில் கேபியின் அம்மாவும் ஆரியை பற்றி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், வரவங்க யாரும் ஆரிய பத்தி பேசாம போறது இல்ல.. பேசுனத பிக்பாஸும் போடாம விட்டது இல்ல..எல்லோருக்கும் அவரைதான் பிடிக்கிறது.. என்று பதிவிட்டுள்ளார்.

எதை கண்டு சிரித்தாய்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி யார் என்பதை பிக்பாஸ் நிரூபித்துவிட்டார். எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்..விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம் ரூபம் ரூபம் ரூபம்.. யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா.. என்று கமலின் விஸ்வரூபம் பட பாடலை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அன்பும் பாசமும் தேவை
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானியின் கன்னத்தை தடவி அவர் அழகாக இருக்கிறார் என்று கேபியின் அம்மா கூறுவது சோ ஸ்வீட். ஷிவானிக்கு அன்பும் பாசமும் தேவை என்றும் கூறியுள்ளார்.

பொறுமையாய் இருந்து..
ஆரியை அனைவரும் பாராட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், உண்மை ப்ரோ, மக்கள் மனதில் இடம் பிடிக்க ரொம்ப கஷ்டபட்டு,பொறுமையாய் இருந்து எல்லாத்தையும் தாங்கி தான் இவ்வளவு நன்மதிப்பை சம்பாதிக்க முடிந்தது.. ஆக்சுவலி இட்ஸ் டைம் டூ செலிபிரேட் வித் பீபிள்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எடிட்டர் சரியில்லையாம்..
பிக்பாஸ் வீட்டில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு கடைசியாக அவர் மேல பழி போட்டா.. நீங்க நல்லவங்க ஆயிடுவிங்களா ரியோ? ஒரு மணி நேரம் போடுற ஷோ லையே உங்களை நல்லா காட்ட முடியல!! இல்ல முழு நாள் போட்டா மட்டும் புத்தர்னு பேர் எடுத்துடுவாரா? இதுல எடிட்டர் சரி இல்லையாம் எடிட்டர் இதெல்லாம் பாக்குறியா? என கேட்டு பங்கமாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











