இந்த வாரம் ஆரியை எவிக்ட் பண்ண முடியாது.. ஆனால் அதுக்கு ட்ரை பண்ணுவாங்க.. அலர்ட்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்று மீண்டும் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இந்த வாரம் ஆரி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.
ஆஜித், ஷிவானி, கேபி ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது, இந்நிலையில் முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பயில்வான்தான்..
ஆரி ரூல்சை ஃபாலோ பண்ணாத அம்பி என்று கூறிய பாலாஜியை, ரூல்ச ஒழுங்கா பாலோ பண்ற ஒரே யோக்கியன் இந்த பயில்வான்தான்.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஓவர் திமிர் ஆயிருச்சு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜிக்கு ஓவர் திமிர் ஆயிருச்சு.. தேவையில்லாம ஆரியை நோண்டுகிறார். இவருக்கு போய் ஆரி கிஃப்ட் பண்ணாரு பார்.. என்று பதிவிட்டுள்ளார்.

அல்லக்கை ஆஜித்..
ஆரி குறித்து பாலாஜி, ரம்யா, ஆஜித் ஆகியோர் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியை மட்டம் பண்ணமட்டுமே உள்ளே கஷ்டபட்டு வந்து இருக்காங்க இந்த பயில்வான், அல்லக்கை ஆஜித்து, டம்மிரம்மி.. என குறிப்பிட்டுள்ளார்.

உனக்கே சிரிப்பு வருதுன்னா..
ஷிவானி நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், கண்ணாடி பின்னாடி இருக்கு கண்ணு!
நீ முன்னாடி பார்த்து லெஸ் இன்வால்டா இருக்காங்கனு சொல்ற.. உனக்கே நாமினேட் பண்ணிட்டு சிரிப்பு வருதுனா பாத்துக்க என்று ஷிவானியை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்

நாங்க பாத்துக்குறோம்..
நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதை பார்த்த இந்த நெட்டிசன், மிக்சர்கள் இப்ப வெளியே வர போறாங்க யாரை தூக்கனும்னு மட்டும் சொல்லுங்க பாஸ்!.. மீதியை நாங்க பார்த்துக்குறோம்.. என்று கூறியுள்ளார்.

யார் கால்ல விழ போறாரோ?
புரமோவில் பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்புறம் என்னப்பா சின்ராசு வழக்கம் போல் செயல் பட ஆரம்பித்துட்டார்.. ஆனா வெள்ளி கிழமை சின்ராசா கைலே புடிக்க முடியாது யாரு கிட்ட கால்ல விழ போறாரோ என்று பாலாஜியை விளாசியுள்ளார்.

நெகட்டிவா காட்ட முயற்சி..
இந்த வாரம் ஆரிய எவிக்ட் பண்ண முடியாது தான். ஆனால் சப்போர்ட்ட குறைக்க நெகட்டிவா காட்ட ட்ரை பண்ணுவாங்க. அப்போ தான் டைட்டில ஆரிக்கு கொடுக்காம அவங்களுக்கு விருப்பமானவங்களுக்கு குடுக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்த வாரம் விடுமுறை
இந்த வாரம் ஆரி நாமினேஷனில் இல்லாததை அறிந்த இந்த நெட்டிசன், அப்புறம் என்னப்பா ஓட்டு போடுறதுல ஆரியின் ரசிகர்களுக்கு இந்த வாரம் விடுமுறை என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











