இன்னைக்கும் ஒரு எவிக்ஷனா ஆண்டவரே.. முதல் புரமோவால் டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் இன்றும் எவிக்ஷன் உள்ளதா என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கேபி 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியதை குறிப்பிட்டார்.
இந்த 100 நாட்களில் பல திருப்பங்களை பார்த்த நிலையில் இன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது என்றும் கூறிப்பிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்று ஏதாவது எவிக்ஷன் இருக்கிறதா என கேட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் டிவியே நினைத்தாலும்
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டிவியே நினைத்தாலும் மாற்றம் செய்ய முடியாத வின்னர்தான் ஆரி என்று பதிவிட்டுள்ளார்.
சோம் வெளியேற்றாமா?
முதல் புரமோவில் கமல் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், இன்று சோம் வெளியேற்றமா ஆண்டவரே என கேட்டுள்ளார்.
முடிவு செய்யப்பட்ட வின்னர்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மக்களால் என்றோ முடிவு செய்யப்பட்ட டைட்டில் வின்னர்.. ஆரி என குறிப்பிட்டுள்ளார்.
என்ன மனுஷன் சார்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு வாரங்களுக்கு முன்பே வின்னர் யார் என்று தெரிந்துவிட்டது.. என்ன மனுஷன் சார் ஆரி என பதிவிட்டுள்ளார்.
கடையை சாத்துங்க ஆண்டவரே
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னும் என்ன மசமசன்னு பேசிகிட்டு இருக்கீங்க!... ஆரிதான் வின்னர்னு சொல்லிட்டு கடையை சாத்துங்க ஆண்டவரே.. என கமலை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
சேஞ்ச் வர கூடாது டாட்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வின்னர் ஆரிதான். இதுல ஏதும் சேஞ்ச் வர கூடாது டாட். என்று பதிவிட்டுள்ளார்.
யாரா இருக்கும்?
முதல் புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கும் ஒரு எவிக்ஷன் இருக்கும் என தெரிகிறது.. யார் அது? ரம்யாவா இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ரங்கராஜன் தான்..
ஆரியின் போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்! ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்! என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











