பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமலை விமர்சித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல் பங்கேற்று வருகிறார்.
அப்போது அகம் டிவி வழியே அகத்திற்குள் செல்லும் கமல் போட்டியாளர்களை நலம் விசாரிப்பதோடு நடக்கும் சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.

மிரட்டல் உருட்டல்
இந்நிலையில் இன்றைய புரமோவில் நாடா காடா டாஸ்க்கின் போது சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை தரக்குறைவாக பேசியது விவகாரத்தை கமல் கையில் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், புரமோவில்தான் உங்களின் மிரட்டல் உருட்டல் எல்லாம் நிகழ்ச்சியில் ஒன்றுமே இல்லை என சாடியுள்ளனர்.

ஒன்னும் பண்ண முடியல
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அட நீங்க வேற ஆண்டவரே! வாராவாரம் நீங்க லேட்டாதான் வர்றீங்க! சீக்கிரம் வாங்கன்னு சொல்றோம்! நீங்க கேட்கல!...எங்களால ஒன்னும் பண்ணமுடியல! என பதிவிட்டுள்ளார்.

அதட்டி கேளுங்க ஆண்டவரே
மற்றொரு நெட்டிசனான இவர், எல்லாம் புளி மூட்டை மாதிரி ஒட்டிகிட்டு இருக்காங்க!... சொன்னதை சொல்லும் குருப்புபிள்ளை போல சொல்றாங்க! கொஞ்சம் அதட்டி கேளுங்க ஆண்டவரே என கோரிக்கை விடுத்துள்ளார்.

தட்டிக்கேட்கவா? ஊனி நடக்கவா?
மற்றொரு நெட்டிசனான இவர், கமல் கையில் செங்கோல் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அந்த குச்சி எதுக்கு ஆண்டவரே! தட்டிகேட்கவா? இல்லை ஊனி நடக்கவா? என கிண்டலடித்துள்ளார்.

அரசியல்வாதி என்பதால்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆவேசமா பேசுறீங்க!... ஆனா நீங்க செயல்ல காட்டமாட்றீங்க ஆண்டவரே!... ஏன்னா நீங்களும் அரசியல்வாதி என்பதால்! என விளாசியுள்ளார்.

ஆராய்ச்சி பண்ணுங்க சார்
மற்றொரு நெட்டிசனான இவர் நேற்றைய டாஸ்க்கை பார்த்துவிட்டு, மிக்சர் முறுக்கு போண்டா வடை சாப்பிட்டுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் 2ம் இடம் 3ம் இடம் வர்றாங்க!... இது என்ன என்று ஆராய்ச்சி பண்ணுங்க கமல் சார்! என வலியுறுத்தியுள்ளார்.

ஃபினிஷிங் சரியில்லையே
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா.. என விளாசியிருக்கிறார்.

3 மணிக்கு தானே போடுவீங்க
மூன்று மணிக்கு முன்னதாகவே புரமோவை வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், என்ன பிக் பாஸ் எடிட்டர்.. எப்போவும் 3 மணிக்கு தானே போடுவீங்க புரோமோஷன்!! என கேட்டுள்ளார்..


Click it and Unblock the Notifications











