புளிச்சுப் போச்சு.. பில்டப் மட்டும் தான்.. விஷயம் ஒன்னும் இருக்காது.. கமலால் காண்டான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கமல் பேசும் டயலாக்குகளை பார்த்த நெட்டிசன்கள் அட போங்க ஆண்டவரே என அலுத்துப்போயுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பேசிய கமல் கடும் கோபமாக இருப்பதை போல் காட்டிக்கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து பேசும் கமல், இன்றிரவு இருக்கு என்பதை போல் விளாசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாரா வாரம் நீங்கள் புரமோவில் மட்டும்தான் இப்படி பேசுகிறீர்கள் நிகழ்ச்சியில் ஒன்றுமிருப்பதில்லை என கூறி வருகின்றனர்.

தகாத நடத்தை

தகாத நடத்தை

சனம் மற்றும் ஆரியிடம் தகாத முறையில் பேசிய பாலாஜி, ஆரியிடம் காலை நீட்டி பேசினார். ஆனால் அதையெல்லாம் நீங்கள் கண்டிக்காமல் தடவிதான் கொடுத்தீர்கள் மாறாக ஆரியைதான் விளாசினீர்கள். இதனால் உங்கள் பில்டப்பை நம்ப தயாராக இல்லை என கூறி வருகின்றனர்.

புளிச்சுப்போச்சு ஆண்டவரே

புளிச்சுப்போச்சு ஆண்டவரே

கமல் பேசும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரி பில்டப் புரோமோக்களை பார்த்து பார்த்து எங்களுக்கு புளிச்சி போச்சு ஆண்டவரே!... கடுப்பேத்தாதீங்க மை லார்டு என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஷயம் ஒன்னும் இருக்காது

விஷயம் ஒன்னும் இருக்காது

புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், வெறும் பில்டப் மட்டும் தான் விஷயம் ஒன்னும் இருக்காது.. என கமலை விளாசியுள்ளார்.

ஆமா கேட்பீங்களா?

ஆமா கேட்பீங்களா?

கமல் பேசும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானை பல்லை பிடிங்கிற மாதிரி.... சாரி... நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேளுங்க ஆண்டவரே!... ஆமா கேட்பீங்களா? என டவுட்டுடன் பதிவிட்டுள்ளார்.

வச்சு செய்யுங்க

வச்சு செய்யுங்க

மற்றொரு நெட்டிசனான இவர், ஒவ்வொரு முறையும்.. என்ன செய்யலாம்னு கேட்காதீங்க.. ஒரு முறையாவது வச்சு செய்யுங்க சார் என்று கடுப்பாகியுள்ளார்.

கேட்க மாட்டீங்க ஆண்டவரே

கேட்க மாட்டீங்க ஆண்டவரே

புரமோவில் கமல் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க சொன்ன அத்தனைக்கும் சந்தேகமில்லாம தகுதியானவன் பயில்வான். அவன்கிட்டயே கேளுங்க. ஆனா நீங்க கேட்க மாட்டிங்க ஆண்டவரே என்று விளாசியிருக்கிறார்.

வைத்தியம் இருக்கு

வைத்தியம் இருக்கு

புரமோவில் கமல் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னிக்கு இரண்டு பேருக்கு வைத்தியம் இருக்கு! என தெரிவித்துள்ளார்.

ஏத்துக்கவே இல்ல சாரே..

ஏத்துக்கவே இல்ல சாரே..

மற்றொரு நெட்டிசனான இவர், ஆரிய தவிர மத்தவங்க யாரும் நீங்க சொல்லுறத ஏத்துக்கவே இல்ல சாரே.. சொல்லுறத புரிஞ்சிக்காம.. யார் என்ன நினைத்தாலும் நான் செய்வது சரி என்றே உள்ளனர்! சனி மற்றும் ஞாயிறு மட்டும் தான் மக்கள் நம்மல பாக்குறாங்கன்னு நினைக்கிறாங்க போல.. இன்னைக்கி பாருங்க எல்லாரிடமும் வேறு முகத்தை காணலாம் என்று பதிவிட்டுள்ளார்.

ஆண்டவர் மாஸ்

ஆண்டவர் மாஸ்

புரமோவில் கமல் ஆக்ரோஷமாக பட்டியலிட்டு பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு இருக்கு வெடி ஆண்டவர் மாஸ் என பதிவிட்டுள்ளார்.

சம்பந்தமில்லாமல் பேசி..

சம்பந்தமில்லாமல் பேசி..

கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன். ஆண்டவரே.. போதும்.. இதோட நிறுத்திக்குங்க.. ஒரு முறை என்றால் பரவாயில்லை.. ஒவ்வொரு முறையும் முன்னோட்டத்தில் பொங்குவதும், நிகழ்ச்சியில் காமா சோமாவென்று என்று இழுப்பதும், இறுதியில் சொல்ல வந்ததை விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாமல் பேசி நிகழ்ச்சியை முடிப்பதும்.. ஷப்பா.. முடியல... என கமலை கலாய்த்துள்ளார்.

பழைய பஞ்சாங்கம்தான்

பழைய பஞ்சாங்கம்தான்

புதிய பாட்டிலில் பழைய ஒயின் என்பது போல் உங்க உடை மட்டுமே மாற்றமாக உள்ளது. நிகழ்ச்சியில் அதே பழைய பஞ்சாங்கம்தான் கமல் சார்.. இந்த தடவை நல்ல மஞ்சபுக்கா புத்தகமா பார்த்து அறிமுகபடுத்துங்க, என கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

டபுள் மீனிங்கா?

டபுள் மீனிங்கா?

புரமோவில் கமல் பேசும் ஒரு வசனத்தை பார்த்த இந்த நெட்டிசன், எதிர் கருத்து உடையவர்கள் (ரஜினி-கமல்) எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது டபுள் மீனிங்கா இருக்குமோ என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X