நேத்து பிக்பாஸ் செஞ்சாரு.. இன்னைக்கு கமல் வச்சி செய்றாரு போல.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கால் செண்டர் டாஸ்க் குறித்து கமல் வெளுத்ததை பார்த்த நெட்டிசன்கள் ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய கமல், கால் செண்டர் டாஸ்க்கில் விட்டுக்கொடுத்தது ஏன் என விட்டுக்கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்களை வச்சு செய்கிறார்.

இதனால் அனிதாவும் பாலாஜியும் செம ஹேப்பியாகியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், கடந்த வாரம் கேபியையும் சோமையும் பாராட்டினார். இன்று இப்படி வாங்குகிறாரே என்றும், நல்ல வேளை இப்போதாவது கேட்டீர்களே என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்னைக்கு கமல்..

இன்னைக்கு கமல்..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், நேத்து பிக் பாஸ் வச்சு செஞ்சாரு.. இன்னைக்கு கமல்ஹாசன் வச்சு செய்றாரு போல என பதிவிட்டுள்ளார்.

ஆண்டவரு அலார்ட் ஆகிட்டாருபா

ஆண்டவரு அலார்ட் ஆகிட்டாருபா

மற்றொரு நெட்டிசனான இவர், தேர்தல் நெருங்க நெருங்க ஆண்டவரு அலார்ட் ஆகிட்டாருபா என புரமோவை பார்த்து கிண்டலடித்துள்ளார்.

அந்த பயில்வானா இவரு?

அந்த பயில்வானா இவரு?

தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட பாலாஜியின் போட்டோவையும் கமலின் முன்பு அமைதியாக அமர்ந்திருக்கும் பாலாஜியின் போட்டோவையும் ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், அந்த பயில்வானா.. இந்த பயில்வான்? என கேட்டுள்ளார்.

முகத்தை குழந்தை மாதிரி

முகத்தை குழந்தை மாதிரி

கமல் சார் வந்தா மட்டும் முகத்தை குழந்தை மாதிரி வச்சுக்கிட்டு இருக்குறது என்று கூறி பாலாஜியை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

முழிச்சிக்கிட்டாரு போல

முழிச்சிக்கிட்டாரு போல

கால் செண்டர் டாஸ்க்கு குறித்து கமல் சாட்டையை சுழற்றுவதை பார்த்த இந்த நெட்டிசன், கடைசி நேரத்துல கமல்சாரு முழிச்சிகிட்டாருபோல! என கிண்டலடித்துள்ளார்.

திருதிருவென முழித்தார்கள்

திருதிருவென முழித்தார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் நேற்று பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு எல்லாருமே திருதிருவென முழித்தார்கள்!! இன்று கமலஹாசன் கேட்ட கேள்விக்கு எல்லாருமே திருதிருவென முழிக்கிறார்கள்! என விளாசியுள்ளனர்.

குறைஞ்சிருக்கு ஆண்டவரே

குறைஞ்சிருக்கு ஆண்டவரே

டாஸ்க்கில் விட்டுக்கொடுத்தது குறித்து கமல் கேட்டதை பார்த்த இந்த நெட்டிசன், மனசுல இருந்த பாரம் ஆதங்கம் கொஞ்சமா இன்னைக்குதான் குறைஞ்சிருக்கு ஆண்டவரே என பதிவிட்டுள்ளார்.

டாஸ்க் புரியல அதான..

டாஸ்க் புரியல அதான..

புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆக மொத்தம் யாருக்கும் டாஸ்க் புரியல அதான.. என கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X