twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பிக்பாஸ் சீசனில் மருத்துவ முத்தம் கொடுக்கப்போவது யார்.. எக்கச்சக்க உதடுகள் இருக்கே!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் இந்த சீசனிலும் காதல் காமம் என சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

    Recommended Video

    Bigg Boss Tamil Season 4 Official Contestant List • Kamal Hassan

    ஜூன் மாதமே தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக இன்று முதல் தொடங்குகிறது.

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

     அட பாவிகளா.. ஐபிஎல் மாதிரியே பிக்பாஸ்லேயும் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்டு போட்டுட்டாய்ங்கய்யா! அட பாவிகளா.. ஐபிஎல் மாதிரியே பிக்பாஸ்லேயும் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்டு போட்டுட்டாய்ங்கய்யா!

    ஆரவ் ஓவியா

    ஆரவ் ஓவியா

    போட்டியாளர்களின் பெயர்களை பார்த்த நெட்டிசன்கள் அப்போ இந்த சீசனிலும் காதல் காமம், க்ரஷ், பிரேக்கப் என பல சமாச்சாரங்கள் இருக்கும் என்று முனுமுனுக்க தொடங்கியுள்ளனர். பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவை காதலித்தார் நடிகை ஓவியா.

    மருத்துவ முத்தம்

    மருத்துவ முத்தம்

    ஆனால் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த ஆரவ், லாஸ்லியாவுக்கு உதட்டுடன் உதடு வைத்து முத்தம் மட்டும் கொடுத்தார். அந்த முத்தத்திற்கு மருத்துவ முத்தம் என்றும் பெயர் வைத்தார் ஆரவ். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

    யாஷிகா - மகத் காதல்

    யாஷிகா - மகத் காதல்

    இதேபோல் இரண்டாவது சீசனிலும் இதுபோன்ற பலான சமாச்சரங்கள் இருந்தன. ஏற்கன வெளியே காதல் உறவில் இருந்த மகத் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்தை காதலித்தார். மகத்திற்கு காதலி இருப்பது தெரிந்தும் யாஷிகா அவர் மீது காதல் கொண்டார். அந்த விஷயமும் வில்லங்கமானது.

    கவின் காதல்

    கவின் காதல்

    இதற்கெல்லாம் டாடியாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன். மூன்றாவது சீசனில்தான் ஏகப்பட்ட காதல் சமாச்சாரங்கள் களைக்கட்டின. நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என ஓபனாக கூறி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் கவின்.

    கவின் - லாஸ்லியா

    கவின் - லாஸ்லியா

    முதலில் கவினை அபிராமிதான் காதலித்தார். ஆனால் கவின் மீது சாக்ஷிக்கும் காதல் வர, தனது காதலை விட்டுக்கொடுத்த அபிராமி முகென் மீது ஒரு தலையாக காதல் கொண்டார். ஆனால் முகென் அவர் காதலை ஏற்கவில்லை. பின்னர் கவினுக்கு சாக்ஷி காதல் போரடிக்க தன்னையே சுற்றி சுற்றி வந்த லாஸ்லியாவை காதலித்தார் கவின்.

    பஞ்சமிருக்காது

    பஞ்சமிருக்காது

    இப்படி தலைசுற்றும் அளவுக்கு பல கோண காதல்கள் இருந்தது கடைசி சீசனில். இந்நிலையில் நான்காவது சீசனில் பல இளம் நடிகைகள் பங்கேற்க உள்ள நிலையில் ரியோ ராஜ், ஆரி, அஜித், ஜித்தன் ரமேஷ் போன்ற இளம் நடிகர்களும் பங்கேற்பதால் இம்முறையும் பல காதல்கள் பிக்பாஸ் வீட்டில் மலரும் என்கின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Who will start Medical kiss in this Biggboss? Netizens says Many loves will bloom in Biggboss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X