அடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்டுக்கு கூட கன்டென்ட் இல்லாத புரமோ என கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் ரியோ தான் எப்படி இந்த வாரம் நாமினேட் ஆகவில்லை என்று தனது சகாக்களான சோம், கேபி, ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த புரமோவில் பெரிதாக சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

கன்டென்ட் இல்லாத புரமோ
கமெண்ட் பண்ண கன்டென்ட் இல்லாத புரமோ.. சுச்சி எலிமினேட் ஆகி போகும் போது அர்ச்சனா ஒதுங்கி நின்ற மாதிரி அல்லாமல் சம்யுக்தா எலிமினேட் ஆகி போகும் போது ஆரி வழி அனுப்பி வைத்தது பாராட்டதக்கது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

குடோன்லயே இருந்து இருக்கலாம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த இழவு புரமோவை போடுவதற்கு பதிலாக 3வது புரமோ அதாவது பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

எப்பவும் பெஸ்ட்
எப்பவும் பாசிட்டிவ்வா இருக்கிறதாகட்டும்.. மத்தவங்கல முடிஞ்ச அளவுக்கு சந்தோசமா வச்சிக்கிறதாகட்டும்.. இவங்க ரெண்டு பேரு எப்பவும் பெஸ்ட்.. இந்த சீசன்ல காமெடி மொமென்ட் அப்படின்னா இவங்க மூணு பேரு மட்டும்தான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விபூதி அடிக்க பாக்குறீயா
டேய் பிக் பாஸ் எடிட்டர்... என்ன டா இது புரமோஷன்....
எங்களுக்கே விபூதி அடிக்க பாக்குறியா? என கேட்டு விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பாலாதான் கேப்டன் போல
ஏதோ நடத்துங்க நாங்களும் வெட்டியா இருந்து பாக்குறோம். ரியோ.. பாலாஜி தான் கேப்டன் போல இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கேவலமாவா போகுது?
அது தெரியும் ஆனா ரமேசுக்கெல்லாம் ஓட்டு போடுற அளவுக்கு கேவலமாவா போகுது பிக்பாஸ் 4 என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மண்ணை கவ்விய ரியோ
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அதீத ஓட்டு பெற்றதால் ஷிவானி ஆஜித் ஆரி வெற்றிபெற்றனர். சில பல ஓட்டுகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வினார் ரியோ! என்று கலாய்த்துள்ளார்.

நாமினேட் பண்ணது இல்ல
கோமாளி ரியோ கூட சண்டை போட்டா தான் அவன் குரூப் மொத்தமா பொங்கி எழுந்து அவங்கள நாமினேட் பண்ணும்.
ஆனா சண்டை போட்ட அந்த ஆட்கள் இதுவரைக்கும் இந்த கோமாளியை நாமினேட் பண்ணது இல்ல.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

கன்டென்டே இல்லையா
எல்லாரும் ஃபன்னா ஜாலியா இருக்கற ப்ரோமோவ பாக்க நல்லாதான் இருக்கு.. ஆனா சண்டையே இல்ல இன்னைக்கின்றதால தான் ஃபன் ப்ரோமோவ போட்டு ஒப்பேத்தறான்.. அப்ப கண்டண்டே இல்லையா இன்னைக்கும்னு சோகமாவும் இருக்கு.. கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











