வாயில்லா பூச்சிக்கு கொடுக்கு முளைத்துவிட்டதுடோய்.. இனி எல்லோரையும் கொட்டும் போலிருக்கே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜிக்கு ஆதராவாக பேசி கேபியிடம் வாங்கிக்கட்டினார் ஷிவானி.

பாலாஜியும் கேபியும் பேசிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாமல் மூக்கை நுழைத்த ஷிவானியை இதுதான் சான்ஸ் என வச்சு செய்தார் கேபி.

ஒண்டிக்கு ஒண்டி..

ஒண்டிக்கு ஒண்டி..

இதுவரை வாயே திறக்காமல் இருந்த ஷிவானியை நெட்டிசன்கள், மிக்சர் முழுங்கி என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் பாலாஜிக்கு ஒன்று என்றதும் ஆவேசமாக கேபியிடம் ஒண்டிக்கு ஒண்டி நின்றார் ஷிவானி. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஷிவானியை வச்சு செய்துள்ளனர்.

சேதாரம் ஏகாம இருந்தா சரி

புரமோவில் கேபிக்கும் ஷிவானிக்கும் இடையில் நடக்கும் சண்டையை பார்த்த இந்த நெட்டிசன், இந்த குழாய்யடி சண்டையில பயில்வானுக்கு ஏதாவது சேதாரம் ஆகாம இருந்தா சரிதான்! என பாலாஜியை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சத்தமே இல்லாம பேசுனாருப்பா..

அட்றா அட்றா வாடா கேப்பிரியல்லா.. அந்த அசிஸ்ட்டன்ட் தொல்லை தாங்களப்பா! உங்க பாலாஜி அண்ணன் சத்தமே இல்லாம பேசுனாருபா.. என ஷிவானியை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கழுவுற மீன்ல நழுவுற மீன்கள்!

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த புள்ளைங்க அமைதியா இருக்காங்கனு மட்டும் நினைக்காதீங்க!
எல்லாக்கூடட்திலையும் இருப்பாங்க ஆனா விவரமான புள்ளைகள்! கழுவுற மீன்ல நழுவுற மீன்கள்! என ரம்யாவையும் கேபியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் டாப் 4ல் அதிக சான்ஸ்.. பிக்பாஸ் வீட்டில் சிறந்த பெண்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கொடுக்கு முளைத்துவிட்டது..

பாலாஜிக்காக ஷிவானி, கேபியிடம் சண்டை போட்டதை பார்த்த இந்த நெட்டிசன், அடடே வாயில்லா பூச்சிக்கு கொடுக்கு முளைத்துவிட்டதுடோய்!.. இனி எல்லோரையும் கொட்டும் போலிருக்கே!.. என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஷிவானி எதுக்கு வந்துச்சு

கேப்ரியல்லா வாய்ஸ் ரைஸ் பண்ணுவேன் என்னா பண்ணுவ இப்போ.. ஷிவானி அவளுக்காக கேம் விளையாட வந்தாளா இல்லனா பாலாஜிக்கு வந்தாலனே தெரியல..
ரியோ சொன்ன வெல்கம் டூ பிக்பாஸ் சீசன் 4 என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அந்த வேலைதான் உனக்கு..

மற்றொரு நெட்டிசனான இவர் ஷிவானி நீ எதுக்கு புதுசா பேசறே.. நீ பாலா பின்னால சுத்துற வேலைய மட்டும் பாரு.. பாலாக்கு பல் விலக்கி விடும் வேலையை மசாஜ் பண்ணும் வேலை மற்றும் பாலாவின் டவுசரை பின்னால பிடித்துக்கொண்டு நடந்து கொண்டே இரு பிக்பாஸ் வீட்டில் உனக்கு இந்த வேலை மட்டும் தந்திருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

ஆள கடிக்காம விடாது

ஷிவானிக்கும் கேபிக்கும் சண்டை நடப்பதை பார்த்த இந்த நெட்டிசன், மற்றொரு மிக்சரு ஷிவானி சீற ஆரம்பித்துவிட்டது ஆள கடிக்காம விடாது! என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

காது கொய்யுங்குது

ஜித்தன் ரமேஷ் ரைட் நவ்.. சண்டை போட்றவனுங்க தள்ளிப் போய் போட மாட்டானுங்க, காது கொய்யுங்குது.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பத்திக்கிட்டு எரியுது

பிக்பாஸின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரே ஒரு பத்திரம்தான் டோட்டல் பிபி வீடும் பத்திக்கிட்டு எரியுது என குறிப்பிட்டுள்ளார்.

பொங்கிருவா போலயே..

கேபியிடம் எகிறி சண்டைபோட்ட ஷிவானியை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி பாலாஜிக்கு ஒரு பிரச்சினைனா பொங்கிருவா போலயே என கலாய்த்துள்ளனர்.

ஒரு துளி பயமில்லை

இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுவரைக்கும் வந்ததெல்லாம் ஒரு சண்டையா? எப்ப பாத்தாலும் கத்தருது இல்ல நொய் நொய்னு பேசறது.
நம்ம கேபி பேபி மாதிரி களத்துல இறங்கணும்.. கண்ணுல ஒரு துளி பயமில்லை என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X