அதிர்ஷ்டம் இருந்தா இப்படியும் வரும் போல.. ஃபினாலே டிக்கெட்டை வென்ற சோம்.. காண்டாகும் ஃபேன்ஸ்!

சென்னை: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்றுள்ள நிலையில் அது குறித்து நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் சோம சேகருக்கு ஃபினாலேவுக்கான டிக்கெட் வழங்கப்பட்டது. இத்தனை நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சோமை மிக்சர் என்றே குறிப்பிட்டு வந்தனர் நெட்டிசன்ஸ்.

இந்நிலையில் கடைசி வாரத்தில் பர்ஃபாமன்ஸை காட்டி ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற்றுவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் அதிர்ஷ்டம் போல என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதல் ஃபைனலிஸ்டு ஆரி

முதல் ஃபைனலிஸ்டு ஆரி

சோம சேகர் ஃபினாலே டிக்கெட் பெற்றதை பார்த்த இந்த நெட்டிசன், மக்கள் ஆதரவு பெற்ற முதல் பைனலிஸ்டு ஆரி அர்ச்சுனன்.. என பதிவிட்டுள்ளார்.

நீங்கள் நேர்மையாக இருந்தால்

நீங்கள் நேர்மையாக இருந்தால்

பிக்பாஸின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடந்த 100 நாட்கள் மக்கள் ஓட்டு போட்டது ஆரிக்குதான்....பிக் பாஸ் வீட்டில் நேர்மையை பார்த்து தான் மக்கள் தேர்வு செய்தார்கள்! அதை போல தான் அடுத்த 100 நாட்கள் கமல்ஹாசன், உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமானால்.. நேர்மையாக இருந்தால் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

இப்படியும் வரும் போல

இப்படியும் வரும் போல

சோம்க்கு டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கிடைத்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், "தேமே"ன்னு இருந்த சோமே டிக்கெட் டூ பினாலே பைனலிஸ்டா!... அதிர்ஷ்டம் இருந்தா இப்படியும் வரும் போல.. என பதிவிட்டுள்ளார்.

90 நாட்கள் படுக்கை..

90 நாட்கள் படுக்கை..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 90 நாள் படுக்கையில் இருந்துவிட்டு 5 நாட்கள் மட்டும் எந்திரிச்சி உட்காந்த சோமுவுக்கு டிக்கெட் டூ ஃபினாலே வின்னர் என பதிவிட்டுள்ளார்.

என்னாங்கடா இது அநியாயம்?

என்னாங்கடா இது அநியாயம்?

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நமக்கு எதுக்கு வம்புன்னு சொம்பு தூக்கிய சோமேவுக்கு பைனலுக்கு டிக்கெட்டா? என்னாங்கடா இது அநியாயம்? என கிணட்லடித்துள்ளனர்.

ஜெனியூன் பிளேயர் ஆரிதான்

ஜெனியூன் பிளேயர் ஆரிதான்

சும்மாயிருந்தாலே பிக்பாஸ் ஃபைனல் டிக்கெட் கிடைக்கும் போல, சோமும் ஆரியுடன் நட்பாக இருப்பது போல் நடந்து கொண்டு பின்னால் புறம் பேசுபவர் தான், எப்போவுமே ஜெனியூன் பிளேயர் ஆரிதான் என பதிவிட்டுள்ளார்.

மொக்க டாஸ்க் மொக்க வின்னர்

மொக்க டாஸ்க் மொக்க வின்னர்

ஃபினாலே டிக்கெட்டை பெற்றுக்கொண்டு சோம் பேசிய பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், இதுல பெருமை வேற.. மொக்க டாஸ்க் மொக்க வின்னர்.. ஃபிஸிக்கல் டாஸ்க் வச்சு அதுல வின் பண்ணதும் அப்புறம் சொல்லு என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரிக்கு மட்டுமே செலுத்துங்கள்

ஆரிக்கு மட்டுமே செலுத்துங்கள்

இதே மாதிரி அடுத்த வாரமும் மக்களின் முழுமையான ஆதரவை பெற்று ஆரி பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறுவார், தொடர்ந்து உங்களின் முழு வாக்குகளை ஆரிக்கு மட்டுமே செலுத்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X