அவமானமாக இருக்கிறது ஆண்டவரே... கமலுக்கு முன்பு எகிறிய தாமரை... கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நேற்று நடந்த சண்டை குறித்து தாமரை மற்றும் பாவனியிடம் விசாரித்தார் நடிகர் கமல்ஹாசன்.
அப்போது கமல் இருப்பதையே மறந்து அவருக்கு முன்பே தாமரை செல்வியும் பவானி ரெட்டியும் சண்டை போட்டுக் கொண்டனர்.

இந்த சீசன் ஜூலி
இதனால் கமலே கடுப்பாகி அவர்களை அடக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இதனை பார்த்த நெட்டிசன்கள் டென்ஷனாகியுள்ளனர். தாமரை செல்வியை கன்னாபின்னாவென விளாசியுள்ளனர். போகும் போக்கை பார்த்தால் தாமரை செல்வி இந்த சீசனின் ஜூலி ஆகிவிடுவார் போல என்று கூறி வருகின்றனர்.

இரிட்டேட்டிங் ஆகுதுப்பா
இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன தான் தாமரை மேலே தப்பு இருந்தாலும், பாவனிய பார்த்தாலே இரிட்டேட்டிங் ஆகுதுப்பா.. என்று பதிவிட்டுள்ளார்.

சோஷியல் டிஸ்டன்ஸ் மெய்ன்டைன்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சீசன் போட்டியாளர்களுக்கு என்னோட அட்வைஸ்... நீங்க டீசன்ட்டா கவுரமா குட் இமேஜோட இருக்கணும்னா தாமரைக்கிட்ட சோஷியல் டிஸ்டன்ஸ் மெய்ன்டைன் பண்ணுங்க... என்று பதிவிட்டுள்ளார்.

பாவனி ஃபேன்ஸ்க்கு வேலை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விடுங்க பாஸ் புரமோ பார்த்து பொங்குறதும், எபிசோட் வந்ததும் தலைமறைவாகுறதுமே, பாவனி ஃபேன்ஸ்க்கு வேலையா போச்சு... அடங்க மாட்றானுங்க... என்று பதிவிட்டுள்ளார்.

கமலுக்கு மரியாதை இல்லை
லட்சம் பேர் அப்ளை செய்து கிடைக்காத வாய்ப்பு இது...
நேற்று தாமரை ஏதோ தான் பாட்டுக்கு நாடகத்தில் இருந்ததாகவும் யாரோ கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் ரேஞ்சு டயலாக்... இன்று கமலுக்கு கூட சிறிது மரியாதை இல்லை... நேற்று வாய்ப்பு தந்தவர்களையும் இன்று கமலையும் அவமதிக்கின்றார்.... என்று பதிவிட்டுள்ளார்.

அவமானமாக உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே... உங்கள் 40 ஆண்டு ரசிகன் சொல்கிறேன்
தாமரை செய்வது மிக அவமானமாக உள்ளது.....
கொஞ்சம் ஸ்ட்ராங் கமெண்ட்ஸ் கொடுத்து கண்டியுங்கள்...
அல்லது இரண்டு வீக்கெண்ட் வரமாட்டேன் என்று ஒதுங்கி விடுங்கள்.... உங்கள் முன்பு அவர்கள் அநாகரீகமாக நடப்பதாக தோன்றுகிறது..... என கூறியுள்ளார்.

தீவிர தாழ்வு மனப்பான்மை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோசித்தால் தாமரை இன்னொசன்ட் இல்லை. ஆனால் தீவிர தாழ்வு மனப்பான்மை அவரைப் பிடித்து ஆட்டுகிறது... ஆட்டத்தை பற்றி
சொன்னாலும் புரியாது தனக்கும் தெரியாது.... வெகு விரைவில் பிக்பாஸ் ஜூலி போல ஆகப் போகிறார்... என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கடந்து சென்று விட முடியாது!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை எதையோ மனதில் வைத்து பேசுகிறார் என்று கூறும் பாவனிக்கு வேண்டுமானால் தாமரை செல்வியிடம் இவர்கள் நடந்து கொண்ட விதம் சாதாரணமா தெரியலாம் மறக்கலாம்! ஆனால் சாதாரண எளிய மக்களால் அப்படி கடந்து சென்று விட முடியாது! என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப மோசம்
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை அக்கா வேஸ்ட், இன்னொசன்ட்ன்னு பார்த்தா அவங்கதான் பக்கா வில்லியா இருக்காங்க .. ரொம்ப மோசம் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கமல் இருக்கும் போது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் யாரும்மா நீ?
தாமரை.... கமலஹாசன் இருக்கும் போது... இப்படி பேசுற...
அப்புறம் அடுத்த வாரம் நான் பிக் பாஸ் நிகழ்ச்சி வரமாட்டேன் சொல்ல போறார்!! என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











