என்ன சொல்ல வர்றார்.. எப்படி பார்த்தாலும் இந்த வாரம் மொக்கைதான்.. பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல் பஞ்சாயத்து பண்ணும் அளவுக்கு பெரிதாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகளை வைத்தே ஓட்டி விட்டனர்.

இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் பேசும் கமல், இந்த வாரம் நடந்த டாஸ்க்குகளையும் அதில் ஹவுஸ்மேட்ஸ் போட்டி போட்ட விதத்தையும் மையப்படுத்தி பேசுகிறார்.

ஒருவர் வெளியேற வேண்டும்

ஒருவர் வெளியேற வேண்டும்

மேலும் இறுதிபோட்டிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஒருவர் வெளியேற வேண்டும். இன்று இரவு எனக் கூறி செக் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமல் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்றும் இந்த வாரம் எப்படியும் மொக்கையாகதான் இருக்கும் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

எப்படியும் மொக்கைதான்

எப்படியும் மொக்கைதான்

ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் பேச்சை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள்.. என்ன தான் சொல்ல வர்றார்.. எப்படி பார்த்தாலும் இந்த வாரம் மொக்கை தான் இருக்க போகுது!! என்று கூறுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கு புரிந்து விடும்

எங்களுக்கு புரிந்து விடும்

கமல் பேசும் இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்று நீங்கள் ஆரியை முதலில் சேவ் பண்ணவில்லை என்றால் தில்லாலங்கடி ஆட்டம் ஆடுறீங்கன்னு எங்களுக்கு புரிந்துவிடும் ஆண்டவரே என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

அவர் இருந்தால் சண்டைதான்

அவர் இருந்தால் சண்டைதான்

ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், எதற்கு ஃபைனல்ஸுக்கு 6 பேர்? ஏன் டபுள் எவிக்ஷன் இல்லை. ரம்யாவை பாதுகாக்கிறீர்களா? அவர் ஒரு விஷம்.. ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே சண்டையை தூண்டி விடுகிறார். இறுதி வாரம் கூட முழுக்க ஆரிக்கு சண்டையும் அவமானமும் தான் இருக்கும். பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது. இந்த 5 பேரை ஃபைனலிஸ்ட் என தேர்வு செய்யுங்கள் என்று பாலாஜி, ரியோ, கேபி, சோம் மற்றும் ஆரி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

மான்போல் மிரள்வதும்

மான்போல் மிரள்வதும்

இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், ப்ரோமோவில் புலி போல் உறுமுவதும் புரோகிராமில் மான்போல மிரள்வதும் ஏன் ஆண்டவரே? என கேட்டு கமலை கலாய்த்துள்ளார்.

நிறைய டாஸ்க் கொடுங்க

நிறைய டாஸ்க் கொடுங்க

இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரம்பத்துல இருந்தே இந்த மாதிரி டாஸ்க் எல்லாம் வெச்சிருந்தா, நம்ம மிச்சர்ன்னு கிண்டல் பண்ணவங்க நிலைமை மாறி இருக்கும் போல. வெறும் சண்டைகளை வெச்சியே இந்த சீசனை ஓட்டிட்டிங்க பிக் பாஸ். அடுத்த சீசன்லயாவது நிறைய டாஸ்க் கொடுங்க. மிச்சர்களுக்கு வாய்ப்பு இருக்காது.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வெற்றி நாயகன் ஆரி

வெற்றி நாயகன் ஆரி

ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி கற்றுக்கொடுத்த பாடம் பயனுள்ளது பிக்பாஸ் விளையாட்டில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து வழி காட்டி வணங்கும் தலைவனாக உரிமையாகிறார். நிகழ்சிக்கு பெருமை சேர்த்து நிமிர்ந்து நிற்கிறான் வானுயர பிக்பாஸ் ஆரி பயணம் பிரமாண்டமான திரைப்படம் பார்த்த திருப்தி வெற்றி நாயகன் என ஆரியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சேலஞ்ச்

சேலஞ்ச்

மற்றொரு நெட்டிசனான இவர், அன்பு கேங்குல ஆரி படுத்து.. ஏன் உட்கார்ந்து இருந்த ஒரு சிங்கிள் ஷாட் போட்டோ காமிங்கடா.. ஓபன் சேலஞ்ச் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விக்ரம் முடிந்தபிறகா?

விக்ரம் முடிந்தபிறகா?

ஆழ்வார்பேட்டை ஆண்டவரே.. பிக்பாஸ் சீசன் 4 முடிந்தபின் முழு நேரம் அரசியல்வாதியா? இல்ல விக்ரம் படப்பிடிப்பு முடிந்த பிறகு முழு நேர அரசியல்வாதியா ?? என கமலிடம் டவுட் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X