இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கொஞ்சம் கூட வொர்த்தே இல்லை என விளாசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில் பாத்ரூமூக்குள் ஒளிந்திருக்கும் ரியோ, சோம் மற்றும் ரியோவை பயமுறுத்தி விளையாடுகிறார்.
ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ படு மொக்கையாக இருப்பதாக கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதை போடாமலே இருந்திருக்கலாம் என விளாசி வருகின்றனர்.

எங்களுக்கும் நல்லது
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இனிமே நீ என்னா பண்றீனா ப்ரமோவே போடதடா அதுதான் உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது... என விஜய் டிவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

கடுப்புதான் வருது..
இங்கயும் இந்த கோமாளிங்க தானா.. விஜய் டிவி சத்தியமா இவனுங்க பண்ற காமெடிய பாத்தா சிரிப்பு வரலடா. கடுப்பு தான் வருது... என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வெறுப்புதான் வருது..
ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுகோங்க, ரியோ பண்ற காமெடி வேலைய வச்சு ஹீரோவா காட்ட ட்ரை பண்றீங்கன்னு புரியுது.. ஆனா வெறுப்பு தான் வருது.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மூன்றாவது அன்சீன் புரமோ
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இன்னைக்கு புரமோ ரெண்டோட நிறுத்தியிருக்கலாம்.. மூன்றாவது புரமோவும் அன்சீன் புரமோவும் போடாமலேயே இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கடுப்பு ஏத்துறார் மை லார்டு
இதெல்லாம் சீசன் 3லேயே சாண்டி பண்ணியாச்சு.. போய் வேற வேலை இருந்தா பார்ரா.. இல்ல இதுமாதிரி மொக்க தனமா பண்ணா.. கடுப்பு ஏத்துறார் மை லார்டு என் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

ஃபேமிலிக்கு பண்ற ஹெல்ப்
உன் புராடெக்ட் முழு சைகோவோ ஆகுறதுக்குள்ள வெளியில அனுப்புங்கப்பா.. அவன் ஃபேமிலிக்கு பண்ற ஹெல்ப்பா இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











