என்னதான்யா உங்க பிளான்? இதை போய் அன்சீன்ல வச்சுருக்கீங்க.. புரமோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவை பார்த்த ரசிகர்கள் இதை போய் அன்சீனில் போட்டு வைத்துள்ளீர்களே என பொறுமி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில் புத்தாண்டில் கொண்டு போகக் கூடாத விஷயம் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்களுக்கு வரும் ஹவுஸ்மேட்டின் பெயரை எடுத்து அவங்கள் கொண்டு செல்ல வேண்டிய குணாதிசயம் கொண்டு செல்லக்கூடாத குணாதிசயம் என்ன என்று கூறுகின்றனர்.

ஆரி சொன்ன மேட்டர்
இதில் ரம்யா கேபியின் பெயரை எடுத்துக் கொண்டு பூசி மொழுகுகிறார். ஆனால் ஆரிக்கு ஆஜித் பெயர் வர, பளீச்சென தனது மனதில் பட்டதை வலிக்காதப்படி சொல்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆரி கொடுக்கும் உத்வேகம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க நேருக்கு நேரா நல்லது தான் சொல்லுறீங்க! ஆனா இத ஒரு கன்டன்டா எடுத்து பாலாஜி, ரம்யா, ஆஜித் உங்களை கிண்டல் கேலி பண்ணுவாங்க. ஆனா ரம்யா நீ தனித்துவம் சொல்லி அவனை முடக்க பாக்குறா & பாலா ஏத்தி விட்டு முடக்கபாக்குறார். ஆரி மட்டுமே எதிர்வினையாற்றி அவனை உத்வேகம் செய்கிறார்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
பாலா கெடுத்துவிட்டார்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆஜித் ஆரியின் அட்வைஸை கேட்டிருந்தால் இந்த சீசனில் நன்றாக விளையாடியிருப்பார். நல்ல பெயரும் வந்திருக்கும். பாலாதான் ஆஜித் மற்றும் ஷிவானியின் வாய்ப்புகளை கெடுத்துவிட்டாரர் என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த அர்ச்சனா நீதான்
ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா பாண்டியன் சுற்றி வளைத்து பேசுகிறார்.. எம்மா கேபி அன்பு கேங்க அர்ச்சனா இடத்துல இருந்து நீதான் புடிச்சு நிறுத்துற என்பதை மறைமுகமாக சொல்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
என்ன பிளான் பண்றீங்க?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் இந்த டாஸ்க் அன்சீன்ல? விஜய் டிவி என்ன பிளான் பண்றீங்க என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
ஆரி சிறப்பு
புரமோவில் ஆரி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் சொல்லும் இதை ஏற்றுக்கொள்கிறேன் ஆரி.. விஷயத்தை சொல்லும் விதம்தான் மேட்டர்.. நீ கடுமையா கொடுத்திருக்க ஆனால் பத்தலை என்பது, நீங்க அன்ஃபிட் என்று சொல்வதை விடவும் சிறப்பாக உள்ளது. உங்களின் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் வார்த்தைகளை தேர்வு செய்து சொல்லுங்கள், பெறுபவரும் சந்தோஷமாக பெறும் வகையில்.. என்று கூறியுள்ளார் நெட்டிசன்.
அன்சீன்ல போடுறீங்க?
அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதை ஏன்டா அன்சீன்ல போடுறீங்க என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











